ஞாயிறு, 6 மார்ச், 2016

காத்துக் கிடந்த புகைப்படக்காரர்கள்...

கசந்த  மருந்து சாப்பிட்டு  பத்து நாள்  காய்ச்சலில்  படுத்துக் கிடந்தவனிடம்   ஜெயமாலினி  படத்தை  காட்டியதும்  சட்டென  எழுந்து  உட்கார்ந்திட்டானாம். கவர்ச்சிக்கு  அந்த காலத்தில்  மட்டுமல்ல  எல்லாக் காலங்களிலும்  மரியாதை  அதிகம். ஆணான  அந்த விசுவாமித்திர  முனிவரே  அங்கதானே  அடங்கிப் போனாரு. ஏன் இந்திரனே  அடுத்தவன்  பெண்டாட்டி மேல  ஆசைப்பட்டுதானே  உடம்பெல்லாம்  பெண்குறி   சாபம்  வாங்கினான். 

 மரியாதைக்குரியவர்கள் எல்லாம்  இப்படித்தான்  எங்கேயாவது  பலவீனப்பட்டு  கிடக்கிறார்கள். அவர்களுடைய  இன்னொரு முகம்  அசிங்கமாக இருக்கும். இப்படிப்பட்டவர்களின் அந்தரங்கம் புனிதமானதாக  இருக்கமுடியாது. சரி, நமக்கு எதுக்கு அந்த அசிங்கமெல்லாம். கிட்டப் போனாலே  கெட்ட நாத்தம்  அடிக்கும்.!

நான்  சொல்லவந்ததே  வேறு.  கவர்ச்சியை  பற்றி சொல்லவந்தேன்.

அண்மையில்  ஒரு திரைப்படத்தின்  பாடல்  குறுந்தகடு  வெளியிட்டு  விழாவுக்கு  சென்றிருந்தேன். அதுதான்  எனது வேலையும் கூட ! படத்தில் நடித்திருந்த ஒரு நடிகை  குட்டைப்பாவாடையிலும்  குட்டையாக ஒரு  கீழாடையை  அணிந்திருந்தார். செழுமையான  தொடைகளின்  தர்ம தரிசனத்தில்  மொத்தக் கூட்டமும்  தேன் குடித்த நரிகளாக  மாறி இருந்தது. மேடையில்  எப்போது  அமர்வார் ,படங்களை கிளிக்  தள்ளலாம்  என்கிற  கடமை உணர்வோடு  காத்திருக்கிறார்கள்  புகைப்படக்காரர்கள்.

அந்த நேரமும் வந்தது. நடிகை  மேடை ஏறினார். வீடியோ கேமராக்களும்  இன்ன பிற கேமராக்களும்  அவர் மீதே குறி வைத்து  படமெடுத்தன. கதாநாயகனுக்கு சற்று வருத்தம் இருந்திருக்கலாம். தன்னை அப்படி குறி வைக்கவில்லையே என்கிற கோபம் கூட வந்திருக்கலாம். நாயகிக்கு  தன்னை சுற்றி  கேமராக்களின்  பார்வை  பாய்வதில்  பெருமை.தனது அழகை  படம் பிடிப்பதாக  நினைத்திருப்பார் போலும்! கையை  ஆட்டியபடியே   ஆசனத்தில்  அமர்ந்தவர்  கால் மேல் கால்  போட்டபடி  அமர்ந்தார். 

தற்போது  கேமராக்களின் பார்வை  இறக்கக்கோணத்தில் ! அப்போதுதான்  நடிகைக்கு புரிகிறது  எதற்காக  கேமராக்களின்  பார்வை  தனது  மீது  பாய்கிறது என்பது.!

அவர் அமர்ந்த  போஸில்  அவரது உள்ளாடை  தெளிவாக  தெரிய  அது படமாகி  இணையதளங்களில்  வைரலாக பரவப்போகிறது  என்பது  புரிய  ,கஷ்டப்பட்டு  போனார்  நடிகை.

 

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...