செவ்வாய், 8 மார்ச், 2016

பெருமைக்குரிய சாதனை....இங்கல்ல! கேரளத்தில்!!

மனிதன்  நினைத்தால்  சாதிப்பான். அவன்  அரசியல்,சாதியம், வர்ணம் இவைகளை  கடந்து  இருந்தால் மட்டுமே  அது சாத்தியம்.  ஆசியாவிலேயே  பெரிதான  சிறந்த  நூலகம்  சென்னையில்  அமைந்தது. வள்ளுவனின்  புகழ்  சிறக்க  கோட்டம் அமைக்கப்பட்டது. திமுக ஆட்சியில்  அதுவும்  கலைஞர் கருணாநிதியின் ஆட்சி காலத்தில்  அமைக்கப்பட்டது என்பதால்  அதிமுக  ஆட்சியில்  செல்வி .ஜெ.யினால்  சீர்  அழிக்கப்பட்டதே !

நல்லவேளை  கேரளத்தில்  இத்தகைய  அநாகரீகம்  இருக்கவில்லை. அரசியல்  அங்கு ஆரோக்கியமாக  இருப்பதால்.!

ஜடயமங்கலம் அருகே  ஜடாயு  நேச்சுரல்  பார்க்  என்று  கானகத்தின்  அருகில்  உருவாகி  இருக்கிறது. இங்குதான்  உலகிலேயே  மிகப் பெரிய  ஜடாயு  சிலை   இருக்கிறது. பதினையாயிரம்  சதுர அடியில்  எழுபத்தி ஐந்து  அடி உயரம், ௨௦௦ அடி  நீளம், நூற்றி ஐம்பது  அடி  அகலம்  என  ராட்சத  அளவில்  அமைந்துள்ள இந்த சிலையை  பட அதிபர்  ராஜீவ்  அன்சல் அமைத்திருக்கிறார். 

இந்த பூங்காவில்  ரோப்கார் ,சிக்ஸ் டி  தியேட்டர்,சித்தா, ஆயுர்வேத கேவ்  ரிசார்ட் ,மற்றும் இதர பொழுது போக்கு  அமசங்களும்  இடம் பெறுகின்றன.

ராவணன்  வெட்டி  வீழ்த்திய  ஜடாயு  வானில் இருந்து  இந்த பகுதியில்தான் வீழ்ந்ததாம். ஆனால்  ஆந்திராவில் விழுந்ததாகவும் ஒரு சேதி  உண்டு.    

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...