முன்னதாகவே எடுத்திருந்த முடிவா, அல்லது விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் விளைந்த கசப்பினாலா,அல்லது பொதுக்கூட்டங்களில் விஜயகாந்தின் விபரீத நடவடிக்கைகளால் எழுந்த வெறுப்பினாலா .....எதன் அடிப்படையில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதில்லை என்கிற முடிவை எடுத்திருக்கிறீர்கள் என்பது தெரியவில்லை. நீங்கள் சொல்கிற காரணங்களும் புரியவில்லை.ஜாதி மோதலை தூண்டுவதாக இருக்கிறது என்பது இன்றுதான் அவருக்கு தெரிந்ததா?
எத்தனை வடிவங்களில் தமிழகத்தில் ஜாதி மோதல்கள் நிகழ்கின்றன என்பது உங்களுக்கு தெரியாதா?
ஆணவ கொலை- சாதி வெறிதானே? பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் மனைவியின் கண் முன்பாகவே கணவனை வெட்டி சாய்த்தது சாதி வெறிதானே?
இப்படி எத்தனையோ ..எத்தனையோ! வெவ்வேறு வடிவங்களில்!
போட்டியிடமாட்டேன் என நீங்கள் அறிவித்தது திடீரென உணர்ச்சிவயப்பட்டதன் விளைவே என நினைக்கிறேன். கூட்டணியின் மரியாதையை காப்பாற்ற வேண்டும் என்கிற கடமை உங்களுக்கு இருக்கிறது.போட்டியிலிருந்து விலகுவது உங்களின் அணிக்கு பலவீனம். என்பது உங்களுக்குத் தெரியாதிருக்குமா? வெறும் ஸ்டண்ட் என்பதாக ஏனைய கட்சிகள் நினைக்கக்கூடும்.நாளேடுகளிலும் தொலைக்காட்சிகளிலும் நாலைந்து நாட்கள் பட்டிமன்றம் நடத்தலாம். அந்தளவுக்கே உங்களின் முடிவு மக்கள் மத்தியில் இருக்கும்.பெரிதும் பாதிக்கப்படுவது உங்களின் இமேஜ் தான்!ஜெயலலிதாவுக்கு ஆதரவானவர் என விமர்சிக்கப்படுவீர்கள்.
வேறு ஏதாவது அதிசயம் நடக்கும் என நம்புகிறீர்களா? வலைப்பூ சகோதரர்களே கருத்துகளை பதிவு செய்யுங்கள்.
அன்புடன் ,
தேவிமணி.