ஞாயிறு, 12 ஜூன், 2016

அற்புத ஆலயம் .

கடவுள் இருக்கிறாரா ,இல்லையா? அவர் விபூதி பூசியவரா, நாமம் போட்டவரா?
இத்தகைய விவாதம் எக்காலமும்  இருந்ததுண்டு. இனியும் இருக்கும். மனிதன் இயற்கையை  வெல்லும் வரை.! முதியவன் என்று இளைஞன்  ஆவானோ..அன்று அதற்கு விடை கிடைக்கும்!
இருக்கிறார் என்கிற நம்பிக்கையுடன் முன்னோர்கள் வடிவமைத்த  ஆலயங்களைப் பார்க்கிறபோது  இன்றைய பொறியாளர்களை விட முன்னோர்களின் அறிவும் ஆற்றலும் நமக்கு இன்றும் அறைகூவலாகவே  இருக்கின்றன.
பனிரெண்டாவது நூற்றாண்டுக்கு செல்வோம்.இங்கல்ல..நாடு கடந்து  கம்போடியாவுக்கு!
அங்கு 'அங்கர்வாட் என்கிற கோவில் நகரம்.குன்றில் இருக்கிறது. குமரன் ஆலயம் இல்லை.
விண்ணைத்தொடும் ஐந்து கோபுரம்.வியப்பூட்டும் சிலைகள்.வேரோடிக் கிடக்கும் விந்தை,எப்படி அமைத்தார்கள் என்பது இன்னமும் விவாதிக்கப்படுகிறது.
இரண்டாம் சூர்யவர்மன் வழிபட்டிருக்கிறான்.கெமர் சாம்ராஜ்யம்.அவனது  ஆலய நகரத்தில் பத்து லட்சம் மக்கள் வாழலாம். இயற்கை அரணாக மலைகள் அமைந்திருக்கின்றன .அகழிகள் என பலத்த பாதுகாப்புடன் அமையப்பட்ட அந்த  ஆலயம் தொடக்கத்தில் சிவாலயமாக  சைவ வழிபாடுகள் நடந்திருக்கின்றன. காலப்போக்கில் அதை விஷ்ணுவின் ஆலயமாக மாற்றி  பின்னர் புத்தர் வழிபாட்டுத்தலமாக மாறியிருக்கிறது. ஆக  ஒரே ஆலயம் காலப்போக்கில் வெவ்வேறு மதங்களாக உரு மாற்றம் பெற்றிருக்கிறது.
ஆனால் சிலைகள் சேதப்படவில்லை.
மேருமலை.பூமியின் மையப்பகுதியில் அமைத்திருக்கிறதாம்.அதுதான் இந்த ஆலயத்தில் மையப்பகுதியாக  இருக்கிறது உயர்ந்த கோபுரமாக.!
மேருவை காவல் காக்கும் சிங்கங்கள் இந்து புராணப்படி!
பிரம்மன் இருக்கிறான்.மகாபாரத,,இராமாயண பாத்திரங்கள்  பாறைகளில்
பாற்கடலில் தேவர்களும் அசுரர்களும் கடைகிறார்கள்.அப்சரஸ்கள் இருக்கிறார்கள்.  ஆச்சரியம் மட்டுமல்ல அதிசயமாகவும் இருக்கிறது. படங்களைப் பார்த்துவிட்டு கருத்துகளை எழுதுங்கள்.