வியாழன், 27 அக்டோபர், 2016

திரையுலக மார்க்கண்டேயனின் 75-ம் ஆண்டு பிறந்தநாள்விழா...

நீ என்ன சாதித்தாய் என கேட்டால் என்ன சொல்வோம்?

"படித்தேன்.பட்டம் பெற்றேன்.கல்யாணம் பண்ணிக்கொண்டேன்.
பிள்ளைகளை  பெற்றேன்.பேரன் பேத்திகளுடன் வாழ்ந்தேன்"

"எல்லோரும் சொல்வதுதான். இவைகளைத் தவிர வேறென்ன சாதித்தாய்? நீ  இந்த உலகிற்கு செய்திருப்பதென்ன? உன்னை நினைவு கொள்வதற்கு எதை  விட்டு சென்றிருக்கிறாய்?"

"என் பிள்ளைகளுக்கு சர்க்கரையை அள்ளிக் கொடுத்திருக்கிறேன்.சொத்து  கொடுத்திருக்கிறேன்!"

"வேற..வேற...?"

ஆட்சியில் இருந்து  விட்டு சென்றிருக்கிற அரசியல் தலைவர்களின் பிள்ளைகளை கேட்டால் "அப்பன் செய்த ஊழல்களுக்கு நான் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன் "என்பார்கள்.

ஆனால் சிவகுமாரின் பிள்ளைகள் சூர்யா,கார்த்தி இருவரும் நெஞ்சு நிமிர்த்தி  " சாகா வரம் பெற்ற ராமாயணம், மகாபாரதம் காதைகளை சுருக்கி சொல்லி விளங்க வைத்திருக்கிறார்.குறுந்தகடுகளாக காலம் நெடுகிலும் அவை  வாழ்ந்து கொண்டிருக்கும் வல்லமை பெற்றவை. அவரது சமகால கலைஞர்கள் யாரும் சாதித்திராத ஓவிய கலையில் தேர்ந்து சிறந்த ஓவியங்களை  அர்ப்பணித்திருக்கிறார். இவைகளுக்கும் மேலாக ஏழை எளிய மாணவ மாணவியர்க்கு கை கொடுக்கும் அகரம் அறக்கட்டளையை நிறுவி இருக்கிறார். எக்காலமும் தொடரும் அந்த அறப்பணி எங்களுக்கும் அல்லவா பெருமை சேர்த்து இருக்கின்றது ." என கர்வமுடன் சொல்வார்கள். வழி வழி வம்சமும் சொல்லி பெருமைப்படுகிற திரை உலகின் வரலாற்று நாயகன்தான் சிவகுமார்.

காந்தியைப் போல ,நேருவைப் போல கல்விக்கண் திறந்த காமராசரைப் போல  இவரது பெயரும் காலம் தொடர்ந்து பயணிக்கும்.

ஓவியங்களை வரைவோர் அருகிவரும் காலம் இது.

அதை தவிர்க்கிற வகையில் ஆண்டு தோறும் சிறந்த ஓவியர்களை தேர்வு செய்து  பரிசளிக்கப்போகிறார்கள் சூர்யாவும்! கார்த்தியும்!!

அரசு மறந்து விட்ட கடமையினை கையில் எடுத்திருக்கிற சகோதரர் சிவகுமாருக்கும் வாரிசுகளுக்கும் தமிழர்கள் கடமைப் பட்டிருக்கிறார்கள்.
கடமையை செய்கிறார்கள் பலனை எதிர்பார்க்காமல்!

இவர்களுக்கு திரையில்தான் நடிக்கவருமே தவிர மக்களிடம் நடிக்கத் தெரியாது.

காரணம் இவர்களுக்கு அரசியல் தெரியாது.

அடுத்து சிவகுமார் ஆய்வு செய்யப்போவது தமிழரின் அறநூலான திருக்குறள்.

வாழ்க என வாழ்த்துவோம்!

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...