திங்கள், 10 அக்டோபர், 2016

சிவன் கட்டளை. அன்னையை கொன்றேன்.!

மூட நம்பிக்கை எனும் புழு மூளையைக்  குடைந்துவிடுமானால் ஒருவன்   சிந்திக்கும் ஆற்றலை எந்த அளவுக்கு இழக்கிறான் என்பதை அந்த செய்தியை படித்ததும் அறிந்து  அதிர்ந்துவிட்டேன்.

கடவுளை எந்த வடிவத்திலும் வழிபடு.அது உன்னுடைய நம்பிக்கையின் அடிப்படையில் கிடைத்திருக்கிற  உரிமை,

ஆனால் அந்த நம்பிக்கையை அடுத்தவர் மீது பிரயோகிப்பதற்கு யார் அதிகாரம்  கொடுத்தது?

அவனின் பெயர் பாலாஜி.

பள்ளி பருவம்  ஆஸ்டலில் கழிந்தது.

அம்மா லலிதாவின் சொல்லே அப்பாவுக்கு  வேதம்.

பாலாஜிக்கு பக்தியில் நாட்டம். சிவனை வழிபட்டான்.

சிற்றின்பம் மறந்தான்.பெற்றோர் சொல் கேளான்.

அன்னை வெறுக்கத் தொடங்கினாள்.அதற்கு அப்பனும் துணை.

எந்த வயதில் இல்லறம் புக வேண்டுமோ அதை தவிர்ப்பவன்  வாழ்க்கை  தடம்  புரண்டுவிடும்.

பெற்றோர் வழி காட்டுதல் முறையின்றி  இருக்குமேயானால் பிள்ளையின் வாழ்க்கை  அழிவை நோக்கித்தான்  பயணிக்கும்.

ஒரு நாள்.......

அம்மா லலிதாவை மகன் பாலாஜி துடிக்க துடிக்க கொலை செய்து விட்டான்.

"நான்தான் அவளை கொன்றேன். அவள் என்னுடைய அம்மாதான்.ஆனாலும் கொன்றுவிட்டேன்!"

ஏன் கொலை செய்தானாம்,அன்னையின் மீது அவனுக்கேன் அத்துனை  கொலை வெறி?

அவன் சொன்ன பதில்தான் அவனது மூளைக்குள் மூடப்புழு குடைந்திருப்பதை உணர்த்தியது.

"நான் தினமும் வணங்கும் சிவன்தான் என்னுடைய அன்னையை கொன்று விடும்படி  கட்டளையிட்டான்.அவனது ஆணையை நிறைவேற்றுவது  அவனின் பக்தனின் கடமை. அதைத்தான் செய்தேன்!"

பக்தி முற்றினால் ?

இறைவன் எவனும் உயிர்ப்பலி  கேட்பதில்லை. ஆட்டை வெட்டு மாட்டை வெட்டு என பலி கேட்காத கடவுள் மனித உயிரையா பலி கேட்பார்.

இல்லை.இல்லவே இல்லை.

  

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...