புதன், 12 அக்டோபர், 2016

எனது பார்வையில் அம்மணி. விமர்சனம் அல்ல!

'மழையும் இல்லையே,வெயிலும் இல்லையே வானவில் வந்தது ஏன் அம்மணியே!'----நா.முத்துக்குமாரின் கவிதை வரிகள் காதுகளில் பதிவு ஆகும்போதே  மனதுக்குள் வித்தியாசமான தளம் ராஜபாட்டை ஆகிறது.இந்நாட்டு மன்னனோ ,மகராசியோ யாரோ ஒருவர் அதில் நடை போடப்போகிறார் என்பது மட்டும் புரிகிறது.

அது ஒரு மூதாட்டிதான் என்று  முடிவு எழுதப்படுகிற போது ஏனோ என் அடிமனதில்  ஒரு வித வலி! இதுதான்  விதி எனப்படுவதா? அல்லது  மூதாட்டியின் வெறுமையின் வெளிப்பாடா?

சொல்லத்தெரியவில்லை!

சாலம்மாளுக்கும் அம்மணிக்கும் இடையே  அப்படி என்ன பாசம்,பற்று?

இயக்குநர் லட்சுமிராமகிருஷ்ணனின் சாலம்மா கேரக்டரும்,சுப்புலட்சுமியின்  அம்மணி கேரக்டரும் வெவ்வேறு தடங்களில் பயணிக்கிறது. சாலம்மா அரசு  மருத்துவமனையில் கூட்டிப்பெருக்கும் ஆயா . குடுகுடு கிழவி அம்மணி வீதியில் குப்பை பொறுக்குகிறவர்.

சாலம்மாவின் பிள்ளைகளுக்கு அம்மாவின் ஓய்வு கால பணத்தின் மீதுதான்  கண்.அது இளையவனுக்கு சாதகமாகவும் ,மூத்தவனுக்கு பாதகமாகவும்  அமைகிறபோது அந்த தாயின் எதிர்காலம் என்ன ஆகும்? இதை எல்லாம் அருகில் இருந்து பார்க்கும் அம்மணி கிழவிக்கு என்ன தோன்றும்?

ரயிலில் அடிபடும் அம்மணியின் மரணம் சாலம்மாவின் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்துவது நாம் எதிர்பாராதது.

ஜிகினா சுந்தரிகளின் குலுக்கல் நடனமில்லாமல், முகர்ந்து பார்க்கும் காதல் காட்சிகள் இல்லாமல் .ஒருவனே பத்து பேரை பந்தாடும் பொய்மை கலவாமல் மனங்களின் போராட்டத்தை மட்டுமே வைத்து தமிழில் ஜெயிக்கமுடியுமா?

இயக்குநர் லட்சுமிராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள் மட்டுமே சொல்ல முடியும்.

விருதுகள் வழங்கும் குழு பரிசுத்தமானதாக இருந்தால் ?

வழங்கப்படலாம்.
கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...