வெள்ளி, 14 அக்டோபர், 2016

ரெமோ.வெட்டி வம்பு .விவகாரம் தேவைதானா?

விகடனில் ரெமோ திரைப்படத்தை ரொம்பவே வாரி இருந்தார்கள். சொறி சிரங்கு வந்தவனின் கையில் செந்தட்டியை யாரோ கொடுத்தது போலிருந்தது  விமர்சனம்.! பெண்களை காப்பாற்றுவதற்கு  இவர்களை விட்டால் வேறு யாருமே இல்லை என்பதுபோல சமூக அக்கறை கொப்பளித்தது!

கல்யாணம் ஆனவளை ஒருவன் டார்லிங் டார்லிங் என்று கூப்பிடுவானாம்  அவளும் ஜெய்ஹிந்த் விலாஸ் மாளிகையை கைப்பற்றுவதற்கு யாரோ ஒருவன் வீட்டில் வைப்பாட்டி மாதிரி வாழ்ந்து கொண்டிருப்பாளாம்.இது விகடனின் தொலைக்காட்சி தொடர்.இன்னும் எவ்வளவோ அழுக்குகள் அவர்களது  தொடர்களில்.!

அவர்களது விமர்சன நெறி யாரால் எழுதப்பட்டதோ தெரியாது.

ஆனால் சினிமாவில் பெண்கள் உயர்வுடன் சித்தரிக்கப்படுவதில்லை என்பது  உண்மை.  பெண்கள்  போகப் பொருளாகவே சித்தரிக்கப்படுகிறார்கள்.

அவள் தாலி கட்டுபவனுக்காகவே காத்திருப்பாள். அவனுடைய  உடல் பசி அடங்குவதற்காகவே அவள் காத்திருக்க வேண்டும். அதற்காக அவளுக்கு மட்டும் 'கற்பு' கவசம். அவனுக்கு இல்லை.

இப்படி எத்தனை கதைகள்!

பாடல்களிலும் பெண்மை கொச்சைப் படுத்தப்பட்டதே!

''காட்டு ராணி கோட்டையிலே கதவுகள் இல்லை.இங்கு
காவல் காக்க கடவுளையன்றி ஒருவரும் இல்லை.
காட்டி காட்டி மறைத்துக் கொள்ளும் சுயநலம் இல்லை.
அதில் கலந்து விட்டால் காலம் நேரம் தெரிவதுமில்லை" என்று ஒரு பாட்டு. சரோஜாதேவி பாடுவதைப் போல அமைந்திருக்கும்.

இன்றுவரை இப்படி எத்தனையோ பாடல்கள். பெண்ணியம் பேசும் பெண்களும் அதைப் பற்றி வாய் திறப்பதில்லை என்பதுதான் கொடுமை.

ஆண்டாளின் பாசுரத்தில் இல்லாததையா  இன்றைய கவிஞர்கள்  எழுதிவிட்டார்கள் என சிலர் சொல்வார்கள்.

ஆக ஆண்டாண்டு காலமாக இருந்துவருகிற  கொடுமையை பற்றி   திடீரென  ஒரு  படத்துக்காக  குமுறி இருப்பதுதான் சந்தேகமாக இருக்கிறது.

 வன்புணர்வு  செய்தவனுடன்  பாதிக்கப்பட்ட பெண் சமரசம் செய்து கொள்ளலாம்" என்பதாக நீதிபதி  கருத்து சொல்கிறார்.

பவித்ரா என்கிற பெண் கணவனுடன் வாழ மறுத்து விவாகரத்து கேட்டால் " மண விலக்கு என்பது கடையில் விற்கும் சரக்கா "என்று இன்னொரு  நீதிபதி  கேட்கிறார் .ஆக சமூகத்தின் பார்வையே  மாறிக் கொண்டிருக்கிறது.

பெண்கள் ஒரு சேர குரல் கொடுக்கப்போவதுமில்லை. விழிப்புணர்வு ஏற்படவும் வழி இல்லை.

 விகடனின் விமர்சனம் யாரையோ குஷி படுத்துவதற்காக  எழுதப்பட்டிருக்கிறது.என்று  விட்டுவிடவேண்டும் .

 சல்மா, பால பாரதி போன்றவர்கள் விலகி நிற்பதே நல்லது. 

1 கருத்து:

Nat Chander சொன்னது…

the film remo had earned the displeasure of many....
the reason is that swathi fell a victim to one side love as agreed by majority...
in remo also one useless guy hardly educated tries forcibly to get the love of a doctor.....in a female disguise....
so everybody in tamil nadu is upset of this film...besides siva kartikeyan put up more drama ... cries... he must be a cheat and a foolish fellow...
in india fifty percent of the population EAT ONE TIME ONLY EVERYDAY...
but this fool sivakarti had earned croresof rupees but yet cries....

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...