சனி, 15 அக்டோபர், 2016

ஒரு தலை காதல்....செல்பி மோகம்...உயிர் பலி!

அது அடுக்கு மாடி  குடியிருப்பு.

பர்வேஷ் கான்  வயது  22. அழகாக இருப்பான். கால்பந்து விளையாட்டு  கற்றுத்தருகிற கோச் .

அதே அடுக்கு மாடியில்தான் அவளும் குடியிருக்கிறாள். இருவருமே  இஸ்லாமியர்கள். இரு வீட்டார்களும் நன்கு பழகி வந்தனர்,

இந்த நவீன கால நாகரீக வாழ்வில் அத்து மீறிப் பழகுவது கூட  அன்பின் வெளிப்பாடுதான் என சொல்லிக் கொள்வார்கள்.

அவள் அத்து மீறத்துடித்தாள். அவன் இணங்கிப் போக மறுத்தான்.

அவள் அவனை ஒருதலையாக காதலித்தாள்.

அவன் மறுதலித்து வந்தான்.

"மணந்தால் உன்னைத்தான் மணப்பேன்; இல்லையேல் மரணிப்பேன் " என  மிரட்டினாள்.

தன்னுடைய பெற்றோரிடம் ஆசையை வெளிப்படுத்தினாள்.அவர்கள் பர்வேஷின்  பெற்றோரிடம் பேசினார்கள். அவனது எதிர்ப்பையும் மீறி  நிக்காஹ்  நிகழ்ந்தது.

கண்ட பலன் அடிக்கடி அவர்களுக்குள் சண்டை. சின்னஞ்சிறுசுகள்தான்.  பகலில் அடித்துக் கொண்டு இரவில் கூடி மகிழ்வார்கள் என அனுபவஸ்தர்கள்  கண்டு கொள்ள வில்லை.

இரண்டே மாதங்கள்தான். அதற்குள் அவள் எத்தனையோ தடவை தாய் வீட்டுக்கு சென்று விடுவாள்.

அன்றும் அப்படித்தான் அவள் அம்மா வீட்டுக்கு சென்று விட்டாள்.

அதிகாலையில் பர்வேஷ்  தன்னை செல்பி எடுத்துகொண்டு அதில் சிறு குறிப்பையும் இணைத்து மனைவிக்கு அனுப்பிவிட்டான் .அவன் அனுப்பிய சிறுகுறிப்பு " நான் தற்கொலை செய்து கொள்கிறேன்"

அவளோ வேடிக்கை காட்டுவதாக நினைக்க அவன் வினை முடித்துக் கொண்டான்.

இந்த கொடிய நிகழ்வு நேற்று மும்பையில் !

ஒருதலை காதலிலும் செல்பி மோகம் விடவில்லையே!

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...