திங்கள், 17 அக்டோபர், 2016

முதல்வர் ஜெயலலிதாவும் இடைத்தேர்தலும்....

அனேகமாக  இந்த செய்தியை நீங்கள்  வாசிக்கிற நேரத்தில் பிரதமர் மோடியின்  சென்னை வருகையின்போது  அவரது  அஜெண்டா என்னவென  என்பது  இறுதியாக்கப்பட்டிருக்கலாம்.

பிரதமரின் அப்போலோ விசிட்டின்போது முதல்வரின் உடல்நலம் பற்றிய  முழு விவரமும் இப்போதே தயாரிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. கடந்த சனிக்கிழமை அன்றே  முதல்வர் ஜெ. அவித்து மசித்த ஆப்பிள் உட்கொண்டதாக  கூறப்பட்டது.

தொண்டையில் அறுவை சிகிச்சை நடந்திருக்கிறபோது இது எப்படி சாத்தியம் ஆகும் என சிலர் சந்தேகப்பட்டனர். உணவுக்குழாயில் எத்தகைய  அறுவையும் நடக்கவில்லை.சுவாசக்குழாயில் மட்டுமே துளையிடப்பட்டதாக சொல்லப்பட்டது  என்பதை அவர்கள் மறந்திருக்கலாம்.

தமிழக சட்டசபையில் காலியாக இருக்கிற மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு  அடுத்தமாதம் இடைத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

முதல்வர் ஜெயலலிதா தொகுதிகளுக்கு செல்ல இயலுமா என்கிற வினா  அழுத்தமுடன் இருக்கிறது. அறிக்கை மட்டுமே அவரால் கொடுக்க முடியும் என்பதே இன்றைய நிலை.

அது குறித்தும் எதிர்கட்சிகள் கேள்விகள் எழுப்பலாம்.

அதிமுகவினர் அம்மாவின்  உடல் நலக்குறைவை  காரணம் காட்டி வாக்குகளை சேகரிக்க  முயலுவார்கள்.

ஆக இந்த மூன்று தொகுதிகளிலும் பாஜக  வேட்பாளர்களை நிறுத்துமா என்பதை மோடியின் வருகைதான் முடிவு செய்யும்.

ஆனால் திமுகவுக்கு இடைத்தேர்தல்  அமில சோதனைதான்!

'எம்ஜிஆர் படுத்துக் கொண்டே ஜெயித்தார்.அம்மாவும் அவரது வழியிலேயே  படுத்தபடியே  ஜெயிப்பார் ' என்று  பிரசாரம் செய்வதற்கு தயாராகவே  இருக்கிறார்கள்.

தேர்தல் நேர்மையாக நடக்குமா என்பது திமுகவின்  சந்தேகம்.

 இந்த இடைத்தேர்தலில்  திமுகவை காங்கிரஸ் ஆதரிக்குமா  ஒதுங்கி நிற்குமா என்பதை முன்னதாகவே முடிவு செய்திருப்பார்கள். ராகுல் காந்தியை திருநாவுக்கரசர்  சந்தித்துப் பேசியபோதே  முடிவு எடுக்கப்பட்டிருக்கும்   அனுதாபம் ஓங்கி நிற்கிற நிலையில் அதிமுகவை எதிர்க்க ராகுல்  விரும்பமாட்டார்.

எதிர்கால நன்மையைக் கருதி  மோடியின் கருத்தை அதிமுக ஏற்றுக்கொள்ளும் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாகும்.

இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதல்வர்  சிகிச்சை பெறும் படங்கள் வெளியாகும் என்றும் நம்பலாம்.

எம்.ஜி.ஆர். கழுத்தில் குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்ற போது அந்த படங்களை  திமுக பயன்படுத்தியதை மறந்து விட முடியுமா?

இவ்வளவு சாதகமான நிலை இருக்கிறபோது மோடியின் முடிவு என்னவாக  இருக்க முடியும்?

பொதுவாக  இன்றைய நிலையில்  அதிமுகவுக்கு  வாய்ப்புகள் அதிகம்தான். ஆனால் எதிர்வரும் காலத்தில் பாஜகவின் ஆதரவு தேவைப்படலாம் அல்லவா?

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...