செவ்வாய், 18 அக்டோபர், 2016

அப்போலோவுக்கு மோடி வராதது ஏன்?

செய்தியாளர்களும் ஊடகங்களும் பெரிதும் எதிர்பார்த்த பிரதமர் மோடியின்  வருகை  ஏமாற்றத்தை அளித்து விட்டது.

அமைச்சர் பொன்னார் சொன்ன சொல்லும் பொய்த்துவிட்டது.

பிரதமர் வராமல் போனதற்கு யார் காரணம்?

மோடி வந்தால் அவர் முதல்வர் ஜெ.யை பார்ப்பது தவிர்க்க இயலாலது. ஆளுனரை தடுத்ததைப் போல பிரதமரை தடுக்க முடியாது. டாக்டர்கள் மருத்துவ அறிக்கை வெளியிடாமல் இருந்ததற்கு  காரணம் சொல்லியாக வேண்டும். ஆப்பிள் சாப்பிட்டார் ,பேசினார் என்பதெல்லாம் அறிக்கையாக  சொல்லப்படவில்லை.

இது பற்றியெல்லாம் பிரதமரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்பதை தடுக்கவும் முடியாது.

தற்போது நோய் தொற்று ஆபத்து இருப்பதால் மிகவும் பாதுகாப்பான  நிலையில்  முதல்வர் வைக்கப்பட்டிருக்கிறார் என்கிறார்கள். டாக்டர்களும்  பாதுகாப்பு உடைகள் அணிந்தே செல்கிறார்களாம்.

.நவீன மருத்துவ சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிற நிலையில் முதல்வரின் அருகில் பிரதமர் செல்வதை தடுக்க இயலாது என்பதால் மருத்துவர்கள் சொல்கிறபோது மோடி வந்தால் போதும் என அதிமுக.நிர்வாகிகள்  மருத்துவமனை நிர்வாகத்திடம்  அறிவுறுத்தியதாக  சொல்லப்படுகிறது. அந்த நிர்வாகிகள் யார் என்பது தெரியவில்லை.

இதனால்தான் பிரதமரின் வருகை தள்ளிப்போடப்பட்டிருக்கிறது.என்கிறார்கள்.
இதனால்தானோ என்னவோ இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடும் என்பதாக மாநில தலைமை அறிவித்திருக்கிறது.

மக்கள் நலக் கூட்டணி ஒதுங்கப்போவதாக திருமா சொல்லிவிட்டார்.

பாமகவும் அதிருப்தியில் இருக்கிறது.பணப்பட்டுவாடா நடப்பதை தடுப்பதற்கு  வழி வகை செய்யப்படவில்லை என்பதாக குற்றம்சாற்றியுள்ளார்.

ஆக அதிமுக---திமுக இடையேதான் கடுமையான போட்டி இருக்கும்.

ஆளுனரின் பங்கு எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை.

பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...