வியாழன், 20 அக்டோபர், 2016

நான் 'ரொமாண்டிக் ' நடிகை-----ஸ்ருதி!

கட்டுனவன்  கம்பு கொடுத்தால் கூரை  ஏறி சண்டை போடுவாளாம் !

கிராமத்து பக்கம் இப்படி ஒரு சொலவடை  உண்டு. இது யாருக்கு பொருந்துமோ ,இல்லையோ  நம்ம சமந்தாவுக்குப் பொருந்தும்.

"அடுத்த வருஷம்தானே கல்யாணம் அது வரைக்கும் சும்மா இருந்தா எப்படி? படத்தில நடி  டார்லிங்" என்று நாகசைதன்யா  கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதால்  மாந்தோப்புகளாக பார்த்து குயில்   கூவத் தொடங்கி இருக்கிறது.

விஷாலின் படத்தில் நடிப்பதற்கு கையெழுத்து போட்டாச்சு.!

"கவர்ச்சியா நடிக்கணும்! ஒ.கே.யா?"

"அதுக்கும் அவர் சரி சொல்லிருக்கார்"

அப்புறம் என்ன கொய்யாப்பழத்துக்கு ஆசைப்பட்டவனுக்கு  ஆப்பிளே கிடைக்கும்போது மாட்டேன்னு சொல்லுவானா?

போட்டு அமுக்கு! கவர்ச்சி ஆடைகளுக்கு காஸ்டியும் டிசைனரிடம்  சொல்லு  என்று விஷால்  ஆர்டர் போட்டுவிட்டதாக தகவல்.

அடுத்த  நியூஸ் நம்ம  ஸ்ருதிஹாசனை பற்றியது....

அப்படியே அப்பா கமல்ஹாசனே தான்!

கடலில் முங்கு நீச்சல் அடிக்கிற ஆளுக்கு  ஏரி என்னங்க  சுண்டைக்கா!

அப்படித்தான்யா நானு என்று தைரியமாக ஸ்டேட்மென்ட் விடக்கூடியவரின்  மூத்த பெண்ணாச்சே!

"நான் ரொமாண்டிக் பொண்ணு! காதல் காட்சிகளில் கவர்ச்சியா நடிப்பேன்.ஆனால் அதுக்கு ஒரு இன்ஸ்பிரேசன் வேணுமே! மோசமான தோற்றம் உள்ளவரா இருந்தா எப்படி ரொமான்ஸ் வரும்? அப்படிப்பட்ட  ஆளுடன் நடிக்க மாட்டேன்.ரசிகர்கள் என்னிடம் எதிர்பார்ப்பது துள்ளலைத்தான்!" என்கிறார்  ஸ்ருதி!

வாழ்த்துகள்மா!

அடுத்து ஒரு போட்டோ.!

சீனியர் சிட்டிசென்ஸ்  இருக்காங்க. யாரையாவது உங்களுக்கு  அடையாளம் தெரியுதா?


1 கருத்து:

மணியன் சொன்னது…

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.நல்லா இருந்தா பாராட்டுங்க. மொக்கையா இருந்தா நறுக் னு கொட்டுங்க. திருத்திக் கொள்வேன்ல.

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...