வெள்ளி, 21 அக்டோபர், 2016

திருந்தவே மாட்டாய்ங்களா?

வெள்ளிக்கிழமை. சுத்த ,பத்தமா ( அதென்ன பத்தமா...புரியல) இருந்து  கந்த சஷ்டி கவசம் கேட்டு , சாமியை கும்பிட்டு விட்டு ஆபீசுக்கு புறப்பட..

"மாப்ளே..கெளம்பிட்டியா...கமிஷனர் ஆபீஸ் பக்கம்தானே உன் ஆபிசு..அங்க  ஏறங்கிடறேன். தட்கல்ல  டிக்கட் எடுக்கணும்.அப்படியே பொடி நடையா நடந்து எக்மோர் போயிடறேன்"என்று நட்பு ஒன்று கட்டையை போட்டது.

 என் பெண்டாட்டியை கூட ஏற்றியதில்லை..இன்று ஒரு கழுதையை ஏற்றவேண்டியதாயிற்று. கேப்டன் வீட்டுக்கு வந்தவன் அப்படியே  ஒரு ஆட்டோவை பிடித்து போகவேண்டியதுதானே! இன்னிக்கி மேஷ ராசிக்கு என்ன பலனோ!அதாங்க என் ராசி!

' உங்க ஊரை பாத்துத்தாண்டா எங்க ஊரு பொம்பளைங்க கெட்டு போயிட்டாளுங்க! வடகம் காயப்போட்ட சேலைத்துணிய மொகரைய  மறைச்சு மண்டைய மூடிட்டு நடந்து போறாளுங்க. பைக்ல போறவளுக்குதான் தூசி அடிக்கிதுன்னா நடந்து போறவளுக்குமா? என்ன கர்மமோ மாப்ள."என்று நூறு அடி ரோடுலேயே தொன தொனப்பை ஆரம்பிச்சிட்டான்.

"பேசாம வாடா! டிஸ்டர்ப்பா இருக்கு! "

"அது எப்படிடா கம்முன்னு வர முடியும்? பேச்சு தொண இருந்தாதானே பின்பாரம் இருக்கிறது தெரியாம ஓட்டுறதுக்கு சவுரியமா இருக்கும்"

"ஏன்டா ..திருந்தவே மாட்டியாடா! "

"மாப்ள..நீ மெட்ராஸ் வந்ததுமே ரொம்பத்தான் மாறிட்ட..அங்க பாரு! புருசன  ராத்திரி பூரா தூங்கவிடாம பண்ணிட்டு ஆபீஸ் போறப்பவும்  அட்டை மாதிரி கழுத்தை கட்டிப்பிடிச்சுகிட்டு போறத! வெக்கமே படமாட்டாளுகளா? அட  அவதான் அப்படி ஒட்டிக்கிட்டு இருக்கான்னா இந்த  நாதாரி நாயி கழுத்தை விடுடின்னு சொல்ல மாட்டானா?"

"எரிச்சலா இருக்குடா ..பேசாம வாடா?"

"இன்னும் கொஞ்ச தூரம்தான் உங்கூட வரப்போறேன். கேட்டா  வெயிட்டு  ஏறங்கிடுமா? சாண் மொளம்தான் கூந்தலு. அதக்கூட  முன்னாடி  இழுத்து விட்டுக்குராளுக. சரிடா  மாப்ள. உங்கிட்ட கேக்கனும்னு ஒன்னு நெனச்சேன். லெக்கின்ஸ்னு ஒன்ன மாட்டிக்கிறது சரி. அத  ஒடம்பு  தோது வாதா இருக்குறவ போட்டா அழகா இருக்கும். கெழவிகள்லாம் போட்டா பாக்கிற பயல்களுக்கு கண்ணுதாண்டா மாப்ள  அவிஞ்சு போகும். அதாண்டி மாப்ள  ஒங்க ஊர்ல ஒழுங்கா மழை பேயல. "

என்னால் அடக்கமுடியவில்லை. அமிஞ்சிக்கரையில் இறக்கிவிட்டு விட்டு
"மச்சான்! நீ பஸ்ச புடிச்சு எக்மோர் போயி சேரு! "என்று பதிலுக்காக கூட காத்திராமல் வண்டியை கிளப்பினேன்.

திருந்தவே மாட்டாய்ங்களா?

2 கருத்துகள்:

Nat Chander சொன்னது…

SONNATHELLAM KAREETTUTHAN
SONNAVITHAM SARIYILLAI JI

மணியன் சொன்னது…

திருத்திக்கிறேன் ..எதிர்காலத்தில் எச்சரிக்கையாக இருப்பேன்.நன்றி.

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...