ஞாயிறு, 16 அக்டோபர், 2016

மோடியின் அப்போலோ விசிட். அரசியல் மாற்றம் நிகழும்!

பிரதமர் மோடி சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவை பார்க்கப் போகிறார்  என்பது சாதாரண  விஷயம் அல்ல.அதில் எத்தனையோ  அதிசயம்,எவ்வளவோ  அரசியல்  கலந்திருக்கும் என்பதை தொடர்புடையவர்கள் உணர்ந்தே  இருப்பார்கள்.

நம்மை போன்ற சாமான்யர்களுக்கு  தெரிவதெல்லாம்  சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருந்து முதல்வரும் ,ஆட்சியினரும் விலக்கப்பட்டு வருகிறார்கள் என்பதுதான்!

முதல்வரின் உடல்நலத்தின் மீது தொடர்புடைய கட்சிக்கு மட்டும் அக்கறை இருப்பதாக சொல்ல முடியாது. மத்திய அரசுக்கும்  அந்த பொறுப்பு இருக்கிறது.

இதனால்தான் பாஜகவின் தலைமை தனிக்  கவனம் செலுத்தி வருகிறது.மக்களின் மத்தியில் நல்லெண்ணத்தை விதைக்க  இதை விட  வேறு வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை.

அகில இந்திய பாஜக தலைவர் வந்து அப்போலோ போய் மருத்துவர்களை  பார்த்து கேட்டறிந்து, மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தந்த தகவலுடன்  டில்லி திரும்பி இருக்கிறார்,பிரதமரை சந்தித்து தனக்கு கிடைத்த விவரங்களை விளக்கமாக சொல்லி இருக்கிறார்.

இதற்கு பின்னரே மோடியின் வருகை பற்றி மத்திய அமைச்சர் பொன்னார் அறிவித்திருக்கிறார்.

ஆளுநரிடம் தகவலை சொன்னது போல பிரதமரிடம்  அப்போலோ மருத்துவர்கள்  சொல்லிவிட முடியாது. எய்ம்ஸ் மருத்துவர்களின்  முழு அறிக்கையும்  அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும்.ஆகவே  முதல்வரை பார்க்கவிடாமல் பிரதமரை தடுக்க இயலாது. பிரதமரின் விருப்பம் எதுவென நம்மால் சொல்லமுடியாது.

முதல்வர் உடல் நலத்தில்  முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதன் பலன்தான்  பிசியோதெரபி மருத்துவர்கள் வந்திருக்கிறார்கள். முக அசைவுக்கு கூட  சிகிச்சை அளிப்பதில் அவர்கள் வல்லவர்கள் என சொல்லப்படுகிறது. அத்தகையவர்களை கொண்டு அளிக்கப்படுகிற சிகிச்சையின் பலனாக  மேலும் முன்னேற்றம் ஏற்படுகிற வாய்ப்பு இருக்கிறது என நம்பலாம்.

இத்தகைய சூழ்நிலையில்தான்  பிரதமர் மோடி வருகிறார். ஓபிஎஸ் முதல்வரின் பொறுப்புகளை ஏற்ற பின்னர் பிரதமரை சந்திக்கிற வாய்ப்பு.

எதிர்கால அரசியலை மனதில் வைத்துக் கொண்டும்   சாணக்கியராக மோடி செயல்படுவார் என நம்பலாம். .அவருக்கு அதிமுக எம்.பி.க்களின் ஒட்டு மொத்த ஆதரவு தேவை. காங்.கட் சியை  பாராளுமன்றத்தில் பலவீனப் படுத்தியாக வேண்டும்.

எம்.பி.க்களை வழிநடத்தும் பொறுப்பில் இருந்தவர்  உடல் நலமற்று இருக்கிற  நிலையில்  யாருடைய வழி காட்டுதலின்படி நடக்கவேண்டும்  என்கிற கேள்விக்கும் மோடியின் வருகையினால் பதில் கிடைத்துவிடும் என்று  அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

தெளிவான பதில் கிடைக்கும் பட்சத்தில் திமுகவின்  அரசியல் எந்த திசையில் செல்லும் என்பதற்கும் விடை கிடைத்துவிடும்.

பார்க்கலாம்.

2 கருத்துகள்:

Nat Chander சொன்னது…

it is too early to predict the future politics while jaya is not in her best health...
even congress might find favour with aiadmk...
let us see

மணியன் சொன்னது…

நீங்கள் சொல்வதை மறுப்பதற்கில்லை.ஆனால் இந்த சூழ்நிலையை விட்டால் பாஜக.வுக்கு வேறு வழியில்லை.காங்.அதிமுகவுடன் உடன்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்பதாகவே உணர்கிறேன்.அது ஜெ.வின் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பினை பொருத்து அமையலாம்.உங்களுடைய கருத்துக்கு நன்றி.அடிக்கடி எதிர்பார்க்கிறேன்

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...