வியாழன், 27 அக்டோபர், 2016

மடையா...மண்டை மேல என்னடா இருக்கு?

பொய் சொல்லக்கூடாது..புரியுதா?
**************************
ஜட்ஜ்:  "சாட்சிக் கூண்டில நின்னுக்கிட்டு பொய் சொல்லக்கூடாது. சத்தியம்  பண்ணிருக்கே!"

சாட்சி: " சொல்லமாட்டேன்  அய்யா!  என் சித்தப்பா ஒருதடவை  கோர்ட்டுல  பொய் சொல்லிருக்காரு!"

ஜட்ஜ் : "உங்க சித்தப்பா பொய் சொல்லிருக்காரா? அப்புறம்  என்ன நடந்தது?"

சாட்சி: " அவரு கேஸ்ல ஜெயிச்சிட்டாருங்க  அய்யா!"
****************************

ரகசிய கல்யாணம் !
------------------------------

சிநேகிதி :" உன்னோட ரகசிய கல்யாணத்தை யாருகிட்டேயாவது சொல்லிட்டியாடி?"

அவள்: " இல்லடி! இந்த ரகசியத்தை கேட்டு என் புருசன் அழனும். அவன் வரட்டும்னு  காத்திட்டிருக்கேன்டி!"

*****************************************

மலிவாக இருக்குடா!
-----------------------------

நண்பன்: " பெண்டாட்டியை ஊருக்கு அனுப்பிச்சிட்டு உன்னால  எப்படிடா சந்தோஷமா இருக்க முடியிது?"

அவன்: " செலவு கம்மியா இருக்குடா! வாழ்ந்து பாரு புரியும்!"

----------------------------------

அவன்: " சே...என்ன எண்பது கிலோ வெயிட்டா நானு? டயட்ல இருந்தும் பிரயோசனம் இல்லாம போச்சே"?

நண்பன்: மடையா! செருப்பை கழட்டிட்டு வெயிட் பார்க்கத் தெரிந்த முண்டத்துக்கு மண்டை மேல இருந்த ஹெல்மெட்டை  கழட்ட தெரியலியே?"

அவன்: ?????

---------------------------------- 

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...