திங்கள், 3 அக்டோபர், 2016

'தல' அஜீத்தின் தலை எழுத்து மாறுகிறது.!

அஸ்ட்ராலஜியை  அரசாங்கமே நம்புகிறபோது மனிதர்கள் நம்பமாட்டார்களா  என்ன?

 டைரக்டர்களின் ஜாதகத்தை வாங்கிப் பார்த்துவிட்டு  வாய்ப்பு கொடுக்கிற புண்ணியவான்கள்  இருக்கிற சினிமா  பூமியாச்சே!

நல்லவேளை ..இன்னும் நடிகைகளின் பூப்புனித நேரம்தான் பார்க்கவில்லை.

கோலிவுட்டின் அடுத்த சூப்பர்ஸ்டார் என்பதாக ரசிகர்கள் கொண்டாடுகிற 'தல' அஜித்  தனது  இரண்டாவது கட்ட படப்பிடிப்பை  ஹைதராபாத்துக்கு மாற்றி விட்டார். சென்னையிலிருந்து திருத்தணி செல்லும் சாலையில் உள்ள ஒரு இடத்தில் படப்பிடிப்பு  நடப்பதாக இருந்தது. அங்கு  சூப்பர்ஸ்டார் ரஜினியின்  படப்பிடிப்பும் நடக்க இருப்பதால்  நம்மால் மற்றவர்களுக்கு தொல்லை எதற்கு என்று இவர் மாறி ஹைதராபாத் போகிறார். ஐந்தாம் தேதியில்  ஷூட்டிங்.

தற்போது அஜித் தனது ஓய்வு நேரங்களில் தனது கையெழுத்தை வேறு  ஸ்டைலில்  எழுதிவருகிறார். அதுவும் கண்களை மூடிக்கொண்டு என்கிறார்கள்.காரணம்  ஜோதிட நம்பிக்கைதான்!  

ஆனால் முதல் கட்ட படப்பிடிப்பின்  தொகுப்பை பார்த்த சிறுத்தை சிவா  அசந்து போய் இருப்பது சத்தியமான உண்மை.

"நாம்தான் இயக்கியிருக்கிறோமா" என்கிற சந்தேகம் கொள்வது  இயல்புதான்! தமிழ்ப்படங்களில் புதிய  சகாப்தம் என்கிறார்கள்.படத்தின் 'ரஷ்' பார்த்தவர்கள்.

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...