திங்கள், 31 அக்டோபர், 2016

சிரிங்க சார்...முடியலியா திட்டுங்க!

நானும் மெனக்கெட்டு சிரிப்பு எழுதிப்பார்க்கிறேன் .பின்னூட்டமே வரமாட்டேங்கிது.என்னை ஆதரிக்கிற கரங்களும் எழுபதிலியே இருக்கு. இதிலும் நான் ஒதுக்கப்பட்டவன் தானா?? சாதியை சொல்லலிங்க.நான் மதுரை சைவாள்.!
*************************
அவன்: " காரியம் ஆகணுமே என்பதற்காக என் பெஞ்சாதியை தங்கம்டினு  கொஞ்சுனது தப்பா போச்சுய்யா"?

மற்றவன்: "என்னவோய்? ஏன் தப்பா போச்சு?"

அவன்: "சொத்த பல்லை எடுத்திட்டு தங்கப்பல்லு கட்டச்சொல்றாய்யா!"
*******************************************************************************

அச்சச்சோ கருவாட்டு கொழம்பு!
------------------------

காதலன்: " இன்னிக்கி உங்க வீட்ல கருவாட்டுக் கொழம்பாடி டார்லிங்?"

காதலி.: " சூப்பர்டா! எப்படிடா கண்டு பிடிச்சே?

காதலன்:" பெரிய கம்ப சூத்திரம் பாரு! உன்னை கிஸ் பண்ணினதுமே ஒரே கப்பு! வாயை கழுவாம வந்திட்டியாடி?"

காதலி:???????
****************************************************************************

நடிகையின் பிறந்த நாள்!
------------------------

"என்னடா மச்சான் ...யாருக்கு பெர்த் டே கிப்ட்?"

"நடிகை குல்மா மொத்வானிக்கு பதினெட்டு வயசு ஆகிடுச்சாம். அதான் !"

"உனக்கும் அவளுக்கும் என்னடா சம்பந்தம்?"

"என்  மாமனாருடன் ஒண்ணா படிச்சவளாம். டை அடிக்காம அவளை பார்க்கிறதுக்கு வெட்கப்பட்டு என்கிட்டே கொடுத்தனுப்புராறு!"
******************************************************

இனி எனது சொந்த அனுபவம்.
-------------------------------------------
நான் ஒரே ஒரு நிமிடம்தான் உயிர் வாழ்வதாக இருந்தால்  அந்த அறுபது வினாடிகளும் என் காதலை சொல்வதற்கு போதாது என் காதலி!
DAMN, THAT SMILE!

7 கருத்துகள்:

சேக்காளி சொன்னது…

//பின்னூட்டமே வரமாட்டேங்கிது//
வலை பதிவன். நம்ம சாதிக்காரன்.வருத்தப்படக் கூடாது ங்கறதுக்காக பின்னூட்டங்கள்

சேக்காளி சொன்னது…

//"சொத்த பல்லை எடுத்திட்டு தங்கப்பல்லு கட்டச்சொல்றாய்யா!"//
கட்டி உடச் சொல்லுங்க. அவசரத்துக்கு அடகு வைக்க ஒதவும்.

சேக்காளி சொன்னது…

//டை அடிக்காம அவளை பார்க்கிறதுக்கு வெட்கப்பட்டு //
மாம்சு க்கு இள நரையாக்கும்?????????

சேக்காளி சொன்னது…

//ஒரே கப்பு!//
அட நாறப் பயவுள்லையளா.

சேக்காளி சொன்னது…

காதலன்:" பெரிய கம்ப சூத்திரம் பாரு! உன்னை கிஸ் பண்ணினதுமே ஒரே கப்பு! வாயை கழுவாம வந்திட்டியாடி?"

காதலி:சரி நான் வாயக் கழுவாம வந்தது இருக்கட்டும். நீ எத்தன நாளா பல்லு வெளக்கலன்னு சொல்லு மொதல்ல.

சேக்காளி சொன்னது…

போதுமாய்யா பின்னூட்டம்.

மணியன் சொன்னது…

சேக்காளி...இப்படி திணற திணற கும்மி எடுத்திட்டிங்களே..மத்த சேக்காளிகளிடமும் சொல்லி வைங்க.நன்றிங்ணா...மருதைக்காரய்ங்க பாசக்காரப் பயலுக.

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...