ஞாயிறு, 30 அக்டோபர், 2016

இடைத் தேர்தலில் அதிமுக வெல்லுமா ?

தமிழகத்தில் நடைபெறவிருக்கிற இடைத்தேர்தலில் ஆளும்கட்சி வெற்றி பெறுமா ,அல்லது முக்கிய எதிர்கட்சியான திமுக.வெல்லுமா?

மூன்று தொகுதிகளிலும் தங்களின் பலம் இதுதான் என்பது தெரிய வந்த பின்னரும் தேமுதிக , பாமக ஆகிய இரண்டு கட்சிகளும் களத்தில் குதித்துள்ளன.

இடைப்பட்ட காலத்தில் அவர்களது கட்சி 'அபார வளர்ச்சி' பெற்றிருக்கலாம்  என்பது அவர்களது நம்பிக்கை.

"பணம்,அதிகார துஷ்பிரயோகம்,ஆளும் கட்சியினரின் அடாவடித்தனம், நேர்மையாக தேர்தல் நடக்காது என்கிற நம்பிக்கையின்மை "----இவையெல்லாம் பாமக,தேமுதிக ஆகிய கட்சிகளின் இன்றைய நம்பிக்கை. அதிமுகவை தங்களால் வீழ்த்த முடியாது என்பது அவர்களுக்கு தெரியாமல்  இல்லை. இருந்தாலும் அதிமுகவை விட திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் அவர்களது முக்கிய நோக்கம்.

தங்களின் துணையின்றி திமுக வெற்றி பெற முடியாது என்பதை அவர்கள் உணர்த்தியாக வேண்டிய கட்டாயம் அந்த இரு கட்சிகளுக்கும்!. பொதுத் தேர்தலில் கூட்டணி அமையலாம். அப்போது  திமுகவை அச்சுறுத்தி அதிக எண்ணிக்கையில் சீட்டுகள் பெறுவதற்கு இந்த இடைத்தேர்தல் முடிவுகள் அமைய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறார்கள்.

ஆனால் திமுக நிலைமை அப்படியில்லை.மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கியிருக்கிறது. விடியல் வெகு தொலைவில் இல்லை என்கிற போது சாமப்பொழுது  எப்படி இருந்தால் என்ன என்பதே அவர்களது நிலை!

 முதல்வர்ஜெயலலிதாவின் உடல் நலமின்மை மக்கள் மத்தியில் ஒரு வித மனமாறுதலை ஏற்படுத்தியிருக்கிறது. அரசு எந்திரம் செயல்படவில்லை. தேக்கம் இருக்கிறது என்பதை உணர்ந்து இருக்கிறார்கள். அரசு ஊழியர்களும்  அதை அறிந்தே இருக்கிறார்கள்.

ஆனால் அதிமுக  இப்போது முன்னிலும் 'தீவிரமாக' அரசு எந்திரங்களையும், காவல் துறையையும் பயன்படுத்துகிற வாய்ப்பு அமைந்திருக்கிறது. அதிமுகவில் உடன்பிறவா சகோதரியின்  கைதான் ஓங்கி இருக்கிறது.அவரால் எதையும் சாதிக்க முடியும். முதல்வர் முழுமையாக உடல் நலம் பெற்று திரும்புகிறவரை சகோதரிதான் எல்லாமே! பொம்மைதான் ஓ.பி.எஸ்.இவரால் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது.தமிழ்நாட்டின் மொத்த நிர்வாகமும் தோழியின் விரல் அசைவில்இயங்குகிறது.முதல்வரின் உடல் நலமின்மை சகோதரியை  விசுவரூபம் எடுக்க வைத்திருக்கிறது.

அதனால் மிகவும் கடுமையான எதிர்ப்பை வலிவுடன் தாங்கும் சக்தி உள்ள  திமுகவுக்கு இடைத்தேர்தல் முடிவு எப்படியும் இருக்கலாம்.

அதிமுகவினர் வெடியுடன் காத்திருக்கிறார்கள்,

2 கருத்துகள்:

மணியன் சொன்னது…

உங்களின் பின்னூட்டம் எதுவாக இருந்தாலும் எழுதுங்கள்.எனக்கு பேருதவியாக இருக்கும் திருந்துவதற்கு ! குறை இல்லாத மனிதன் யாருமில்லை.

Nat Chander சொன்னது…

hi man this is my prediction
thirupparangundram.... dmk will lose deposit
aravakurichi........dmk will win
tanjavur....... dmk will win in low margin...

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...