செவ்வாய், 25 அக்டோபர், 2016

என்ன கொடுமைடா கோவாலு...!திரிஷா கண்டிக்கலியே!!

நம்மை சுற்றி என்ன நடக்கிறது ?

இணைய தளங்களை பார்க்கிறபோது  நெஞ்சே வெடித்து விடும் போல்  இருக்கிறது. நாளேடுகளை வாசிக்கிறபோது ரத்த நாளங்கள்  வெடிக்கிற  அளவுக்கு  வெப்பம் ஓடுகிறது.!

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையோ ?

ஒருதலைக்காதல் என்று  பெண்களை குத்திக் கொள்கிறார்கள். கற்பழித்து  நார் நாராக கிழித்து எறிகிறார்கள்.

இனி இத்தகைய செய்திகள் பழசாகிவிடுமோ என்னவோ!

பயம் வந்து விட்டது  சகோதர,சகோதரிகளே!

மனிதனை மிருகம் என விலங்கினம் சொல்லிவிடுமோ என்னவோ!

நாயை புணர்ந்திருக்கிறான் இருபத்தி இரண்டு  வயது இளைஞன்!!

ஹைதராபாத்தில் நடந்திருப்பது மனித இனத்திற்கு நடந்திருக்கும் இழுக்கு. விலங்கினத்துக்கு ஏற்பட்டிருக்கும் பேராபத்து.

டில்லியை சேர்ந்தவன்.

வேலை தேடி ஹைதரபாத்  வந்திருக்கிறான்.அலைந்திருக்கிறான்.

வறுமைதான். ஆனால் அந்த நிலையிலும்  உடலுக்கு பசி.

தெருவில் திரிந்த நாயை புணர்ந்திருக்கிறான். அவனது வன்கொடுமையை தாங்காது நாய் செத்ததோ,அல்லது செத்த நாயை புணர்ந்தானோ தெரியாது. போலீசில் சிக்கிவிட்டான்.

நல்ல மனநிலை உள்ளவன்தான் என்கிறது போலீஸ்!

அண்மையில்  சென்னையிலும் கொடுமை நடந்திருக்கிறது

மருத்துவம் படிக்கும் மாணவர்கள் இருவர் மாடியிலிருந்து  நாயை  தூக்கி தரையில் வீசி  அதை படம் பிடித்திருக்கிறார்கள்..இவர்கள் மனிதர்களுக்கு எப்படி மருத்துவம் செய்வார்களோ?

நல்ல வேளை. நாய் சாகவில்லை. கால் முறிந்துவிட்டது.

குற்றம் செய்திருப்பவர்கள் பெரிய இடத்துப்பிள்ளைகள். காவல் துறைக்கு எப்போதுமே கார் வைத்திருப்பவர்கள் மீது கருணை உண்டு.

தண்டிக்கப்படுவார்களா , மன்னிக்கப்படுவார்களா என்பது காவல்துறைக்கு மட்டுமே தெரியும்.

என்ன கொடுமைடா கோவாலு? இதை திரிஷா கூட கண்டிக்கவில்லையே!

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...