சனி, 8 அக்டோபர், 2016

முதல்வர் ஜெ எழுந்து வர பிரார்த்திப்போமாக!

உண்மை உறங்கும்போது வதந்திகளுக்கு உயிர் வந்துவிடும்.

நொடிப்பொழுதில் உலகை சுற்றி விடும். உண்மை விழிக்கும்வரை வதந்திகளுக்கு ஆயிரம் வாய்கள்.! யாராலும் அடக்க முடியாது. அது சில  நேரங்களில் உண்மையாகிப் போவதால்!

முதல்வர் ஜெ.யை  பற்றி தாண்டவமாடுகிற வதந்திகள் பொய்தான் என மெய் ஞான அடிகளான அரசியல் கட்சி தலைவர்கள் சொல்லிவருவது எல்லாமே  உண்மையாகி ஜெ எழுந்து வரட்டும்.

அகில இந்திய தலைவர்கள் எல்லாம் அப்போலாவின் விசிட்டர்களாகி பிரார்த்தனை செய்வதெல்லாம் பலிக்கவேண்டும் என்பதே மக்களின் தவம்.அதிலும்  ராகுல் காந்தி அவரது கூட்டணி கட்சித்தலைவர் கலைஞரை  கூட  பார்க்காமல் முதல்வரின் உடல் நலம் பற்றி அறிந்து கொள்வதற்காக மட்டுமே வந்திருக்கிறார் என்பதை அடிக்கோடிட்டு கொள்ளவேண்டும்.

அவர்கள் அனைவரும் முதல்வரை பார்த்தார்களா அல்லது மருத்துவர்களைப்  பார்த்து கருத்துகளை கேட்டார்களா என்பதைப் பற்றி விவாதிப்பது  அவசியமற்றது.

ஸ்டாலின் , தா. பா, திருமா,வைகோ,சீமான்   என இன்ன பிற தலைவர்கள்   அரசியல் ஆதாயம் கருதாமல் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து சென்றிருக்கிறார்கள்,

ஆகவே அவர்களையும் நம்புவோம்.

முதல்வரின் உடல் நிலையை வைத்து  யாரும்  அரசியல் நடத்தவேண்டாம்  என்பதே நாட்டு மக்களது விருப்பம்.

அதிலும் இந்த சுப்பிரமணிய சுவாமியின்  ஆலோசனையை யாரும் கேட்கக்கூடாது .

அப்போலோ மருத்துவமனையின் அறிக்கைப்படி " முன்னேற்றம் ஏற்பட்டுவருவதாக" சொல்லப்பட்டு வந்த நிலையில் அண்மையில் வெளியிட்ட  அறிக்கையில் "கண்காணிக்கப்படுகிறது" என்பதாக ஒரு மாற்றத்தை சொல்லியிருக்கிறார்கள்.

இதனுடைய உண்மையான பொருள் மருத்துவர்களுக்கு மட்டுமே தெரியும்!

முன்னேற்றம்தான் என சொல்லிவந்தவர்கள் அதை மாற்றி கண்காணிக்கப்படுகிறது என்று சொல்வதால் மக்கள் மத்தியில் குழப்பம்  ஏற்படலாம்.

அதை போக்குவது மருத்துவர்கள் கடமை மட்டுமில்லை அரசின் கடமையும் ஆகும்.

செயற்கை சுவாசத்துக்கு பதிலாக சுயமாக முதல்வர் அம்மா மூச்சு விடவேண்டும் அதுதான் உண்மையான  மாற்றம். அது விரைவிலேயே நிகழும் என நம்புவோமாக.

ஆக முதல்வர் அம்மா எழுந்துவர பிரார்த்திப்போமாக..

1 கருத்து:

Thangaraj சொன்னது…

all the moments are polytics sir they are not remember cauvery issues

nice post
Thangaraj V
vtjana07@gmail.com
www.dataentryjobathome.com

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...