சனி, 15 அக்டோபர், 2016

இடுப்பு வேட்டியை காங்.கட்சியிடம் இழக்குமா தி.மு.க.!

அதிமுக பலவீனப்படுமேயானால் அது திமுகவுக்குதான் பலன்தருமே தவிர  வேறு எந்த கட்சியும்  ஆதாயம் பெறுகிற வாய்ப்பு இல்லை. அதிமுகவின்  சாம்சனாக  திகழ்கிற முதல்வர்  ஜெ.யின் உடல் நலக்குறைவை பயன் படுத்தி  மிகவும் திறமையுடன் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது  மத்தியில்  அரசு செலுத்துகிற பா.ஜ.க.

இதனால் அதிமுகவின் வலிமையாக இருந்து கொண்டிருக்கும்  ரத்தத்தின் ரத்தமான  உறவுகளின்  கனிவு  நிறைந்த பார்வை பாஜக பக்கம் திரும்புவதற்கு  வாய்ப்பு இருக்கிறது. அம்மாவுக்கு கை கொடுத்துவரும் தாமரை கட்சிக்கு ஆதரவாக இருந்தால் என்ன என்கிற மனநிலைக்கு வருகிற நிலைமை வரவே வராது என சொல்ல முடியாது.

முதல்வர் ஜெ.யிடம் இருந்த பொறுப்புகள் ஒ.பி.எஸ்.சிடம் சென்றதற்கு கவர்னர்தான் காரணம் என்பதாக  புலனாய்வு பத்திரிகைகள் அழுத்தமுடன் சொல்லி வருகின்றன.ஒ.பி.எஸ்.சிடம் பொறுப்புகள் போனதை சசிகலா விரும்பவில்லை என்றும் எழுதுகிறார்கள்.

இது முதல்வரின் உடல் நலத்தை வைத்து நடத்தப்படுகிற  அரசியல்.

இது ஒரு பக்கம் என்றால்   இன்னொரு பக்கம் தி.மு.க.வுடன் உரசிப்பார்க்கிறது  காங்.கட்சி!

திருநாவுக்கரசர்  கட்சி தலைவராக நியமிக்கப்பட்டதுமே கட்சிக்கு புதிய பலம் வந்து விட்டதாக நினைக்கிறார்கள். திருச்சியில் நடந்த போராட்டத்தில் ப.சிதம்பரம் பங்கு பெற்றமையால் கோஷ்டிகளே  இல்லாமல் போய்விட்டதைப் போல ஒரு வித மாயை.!

அழுக்கு போக குளிச்சவன் இல்லை என்பதை போல கோஷ்டிகள் இல்லாத காங்கிரசே இல்லை என சொல்லலாம்.

தனித்து நிற்கும் வலிமை இல்லாத தேசிய இயக்கம் காங்கிரஸ்.

அதிமுக பக்கம் போகும் வாய்ப்பு இல்லாத நிலையில் இவர்களுக்கு நிழல் தரக்கூடியது  தி.மு.க.தான்!

அண்மையில் நடந்த காங். மாவட்டத்தலைவர்கள் கூட்டத்தில் திமுகவுடன் கூட்டு சேருவதற்கு தூத்துக்குடி மாவட்ட தலைவர்  மட்டும்தான் ஆதரவு தெரிவித்தாராம். மற்ற மாவட்ட தலைவர்கள் கடுமையாக எதிர்த்து குரல் கொடுத்திருக்கும் நிலையில் அவர்களுடன் கூட்டு வைத்தால் தி.மு.க. வின்  நிலை என்ன ஆகும்?

"தோளில் போட்டுக் கொள்ளும் துண்டு மாதிரிதான் ஆட்சியும்.! தூக்கி வீசி விட்டு போவோம்.கொள்கை என்பது இடுப்பு வேட்டி மாதிரி. அதை ஒரு போதும் இழக்கமாட்டோம்"என்று சொல்கிறவர்கள் திமுகவின் உடன் பிறப்புகள்.

''திமுகவினால்தான் அதிக இடங்களை இழந்தோம் என்று குற்றம் சாட்டியுள்ள  கட்சியுடன்  மறுபடியும் கூட்டு வைப்பார்களா?

காங்.மேலிடம் சொல்கிறபடிதான் காங்.கட்சி நடக்கும் என்பது திமுகவின் சப்பைக்கட்டுவாக இருக்குமேயானால்........

ப.சிதம்பரமே மேலிட பேச்சை கேட்பாரா என்பது சந்தேகம்தானே?

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...