ஞாயிறு, 30 அக்டோபர், 2016

மாவீரன் பிரபாகரனை பற்றிய . தெலுங்கு படம்.எச்சரிக்கை தேவை.

'ஒக்கடு மிகிலடு' ----தெலுங்கில் இந்த பெயரில் ஒரு படம்.

மாவீரன் மட்டுமல்ல,உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவராகவும் மதிக்கப்படுகிற  காவல் தெய்வம்தான்  பிரபாகரன்.

அவரைப் பற்றி ஒரு திரைப்படம் தெலுங்கு மொழியில் தயாராகி இருக்கிறது.
அந்த படத்தின் முதல் சுவரொட்டியில்' ஸ்ரீலங்காவின் சிவில் வாரை பற்றிய படம் என்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.

அதுவே தவறு. விடுதலைப் போரை எப்படி அவர்களால் உள்நாட்டு கலகம் என  சொல்ல முடிகிறது?

தெலுங்கானா போராட்டத்தை அவர்கள் எப்படி கருதுகிறார்கள்?

ஒரே மொழி பேசுகிற அவர்கள் இடையில் நடந்த போராட்டம் எதை  அடிப்படையாக கொண்டது? சிந்தித்திருப்பார்கள் என நம்புவோம்!

விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் தமிழர்களை  இழிவு படுத்துகிற வகையில் இருக்காது என்று நம்புவோமாக.
*****************************
சமந்தாவை பற்றி......
---------------
சமந்தா -சைதன்யாவின் காதலைப் பற்றி உலகமே அறியும்.

முன்பெல்லாம் இதைப் பற்றி கேட்டாலே முகம் சுழிப்பார் சமந்தா .
இவரது கடந்த கால சித்தார்த் நட்பை பற்றி துளியும் கவலைப்படாமல் அக்கினேனி குடும்பம் திருமணத்துக்கு ஒப்புக் கொண்டிருக்கிறது.

அது காதலுக்கு மரியாதை!

இதன் பிறகு தற்போதுதான் மனதை திறந்திருக்கிறார். அங்கு சித்தார்த் இடம் பெற்றிருக்கவில்லை.

"உங்களுக்கு பிடித்த முக்கியமான மூன்று எவை என்று சொல்ல முடியுமா? " என கேட்டதற்கு சமந்தா சொல்லியிருக்கிற பதிலில் சைதன்யாவுக்கு முதல் இடம்.

"சைதன்யா, அடுத்து மங்காட்டி ஐஸ் கிரீம். மூன்றாவது ஒர்க்!"

கேள்வி கேட்டவர் இத்தோடு நின்றிருக்கலாம்.

"ஏன்  சைதன்யா? என்னை பிடிக்காதா?"

"எட்டு வருஷங்களுக்கு முன்னர் உங்களை சந்திக்கவில்லையே? நல்ல நண்பராக இருந்திருப்பீர்" என்று  சொன்னதில் புத்திசாலித்தனமும் கலந்திருக்கிறது.!

சித்தார்த் எனது நண்பர்தான்.! காதலர் இல்லை!

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...