திங்கள், 31 அக்டோபர், 2016

சிவாஜியை வெல்வேன் என்று சொன்ன நடிகர் யார்?

"அய்யான்னு ஏன் வளையிறிங்க.நிமிந்து நில்லுங்க சார்னு சொன்னா போதும் " என்று போலீஸ்காரரை பார்த்து இன்ஸ்பெக்டர் சொல்வாரா? அப்படி சொல்வறேயானால் காலம் மாறுதுன்னுதானே அர்த்தம்?

சென்சார் போர்டு குழுவில் உயரிய பொறுப்பில் இருந்துவருகிற எஸ்.வி.சேகர் படத்தயாரிப்பாளர்களைப் பார்த்து "எஜமானேன்னு ஏன் தணிக்கை குழுவிடம் கெஞ்சி கூத்தாடுறிங்க?அப்படி செய்யாதிங்க "என்று சொன்னால் என்ன அர்த்தம்?

படத்தயாரிப்பாளர்களுக்கு முதுகு எலும்பு வளைந்துதான் இருக்கிறது.! அது தணிக்கை குழுவிடம் செல்கிற போது மேலும் அதிகமாகவே வளைந்துவிடும். இவர்களிடம்அ திமுக மந்திரிகளும் தோற்றுப் போவார்கள் என்றுதானே பொருள் கொள்ளமுடியும்?

திட்டிவாசல் என்கிற படத்தின் பாடல்கள் வெளியீட்டுக்கு வந்த எஸ்.வி.சேகர்  அப்படி சொன்னதிலும் காரணம் இல்லாமல்  போகாது.

"தயவு செய்து ரிலீஸ் தேதியை நிர்ணயம் செய்துவிட்டு சென்சாரிடம் போகாதீர்கள். அங்கு போய் கெஞ்சி கூத்தாடாதீர்கள். கட் கொடுத்தால் ஏன் எதற்கு என்று தைரியமாக கேளுங்கள். நியாயமான காட்சிகள் என்றால்  போராடுங்கள்.

நடிகர்களுக்கும் ஒரு அறிவுரை.வரும்போதே சிவாஜிகணேசனை மிஞ்சி விட்டேன் என்கிற எண்ணமெல்லாம் வேண்டாம். அவர் எவரெஸ்ட், அவரோடு கம்பேர் பண்ணாதிங்க.மேலும் ஆடம்பரமாக வாழ்வதற்கு ஷூட்டிங் இல்லை.அவசியமே இல்லாத இடங்களிலெல்லாம் கேரவான் கேட்காதிங்க. என் படத்துக்கு என் பையன் கேரவேன் கேட்டான் .சம்பளத்தில் பிடிப்பேன் பரவாயில்லையா என்றதும் வேணாம் வெட்டவெளியே சுத்தமான காத்துதான்னு சொல்லிட்டான்" என்று  சேகர் சொன்னபோது  நடிகர் சங்கத் தலைவர் நாசர் முகத்தில் புன்னகை.

அது சரி சிவாஜியை மிஞ்சுவதாக சொன்னவர் யாரு?

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...