வெள்ளி, 7 அக்டோபர், 2016

அழகு திமிர் இரண்டும் சேர்ந்த கலவை நயன்!

பாகுபலிக்கு அடுத்து  தமிழில் மிரட்டலாக தீபாவளிக்கு வரவிருப்பது 'காஷ்மோரா"

கார்த்திக்குடன் , நயன்தாரா,ஸ்ரீ திவ்யா இருவரும் நடித்திருக்கிற படம். கார்த்தியின் சின்னம்மா மகன்தான் தயாரிப்பாளர் பிரபு.

"பிரமாண்டமான படத்தை பெரிய பட்ஜெட்டில் கொடுக்கிறோமே ,தம்பி பிரபு  தாங்குவானா என சந்தேகப்பட்டேன்.கடவுள் அருளால் படத்தை முடித்துவிட்டான். எங்களின் மூன்று வருட உழைப்புதான் காஷ்மோரா" என தொடக்கத்திலயே சொல்லிவிட்டார் கார்த்தி.

ரவுத்திரம்,இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களை இயக்கிய கோகுல் எதையும் வெளிப்படையாக பேசிவிடுவார். ஒளிவு மறைவு  எதுவும் கிடையாது.

"ராணி ரத்னமா தேவி கேரக்டருக்கு யாரை போடலாம் என யோசித்தபோது தயாரிப்பாளர் பிரபுதான் நயன்தாராவின் பெயரை சொன்னார். அந்த கேரக்டருக்கு  அவரை விட வேறு யாரையும் நினைக்கமுடியவில்லை. அழகு, திமிர், இரண்டும் கலந்த கேரக்டர். நான் எந்தவித உள் அர்த்தத்துடன் சொல்லவில்லை.இந்த படத்தின் டெக்னிஷியன்கள் அத்தனை பேரையும் தூக்கி சுமந்தவர் கார்த்திதான்! மூன்றுவிதமான  கேரக்டர்கள்.ராஜ்நாயக் கேரக்டரை எப்படி செய்வாரோ என்கிற சந்தேகம் இருந்தது. அவ்வளவு கனமான கேரக்டர்.தயங்கினேன். ஆனால் கேரக்டரை உள்வாங்கி அவர் நடித்தது  எனது பயம் அர்த்தமற்றதாகிவிட்டது.லுக்,பாடி லாங்குவேஜ்  இரண்டும் பிரமிப்பூட்டியது." என்றார்  இயக்குநர் கோகுல்.

லலிதானந்த் , முத்தமிழ் இருவரும் பாட்டு எழுதியிருக்கிறார்கள்.

இந்த படத்தின் இன்னொரு பெருமை கம்ப்யுட்டர், வி.எப்.எக்ஸ் எல்லாமே  தமிழ்நாட்டில்தான்! ஐந்து சதமே வெளிநாட்டில் செய்யப்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...