சனி, 15 அக்டோபர், 2016

மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் குற்றவாளியா ?

2011--ம் ஆண்டு.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வீட்டில் வருமான வரி  வீரர்கள்  ரெய்டு நடத்தியபோது அங்கு இரண்டு யானை தந்தங்கள்!

தேடிப்போனது வரி ஏய்ப்பு நடந்திருக்கிறதா என்பதை கண்டு பிடிக்க! .மாட்டியதோ  தந்தங்கள்.குறைந்த பட்சம் தங்கத்தையாவது கைப்பற்றி  இருக்க வேண்டும்.புலி வேட்டைக்குப் போனவன் பெருச்சாளியை பிடித்திருந்தாலாவது  பெருமைப் பட்டுக்கொள்ளலாம். ஆனால் சுண்டெலியை பிடித்துவிட்டு ஒரு வழக்கையும் பதிவு செய்து விட்டார்கள்.

மோகன்லால் வீட்டில் மட்டுமில்லாமல் பணக்காரர்கள் வீட்டில் பெருமைக்காக  யானை தந்தங்களை வாங்கி அழகுப் பொருளாக வைத்திருப்பார்கள். இது கேரளத்தில் சகஜம்.

பாரஸ்ட் டிபார்ட்மெண்ட் அதிகாரிகள்  எப்.ஐ.ஆர்.போட்டதுடன் சரி! கடமை  முடிந்தது. அன்று ஊறப்போட்டவர்கள்தான்.  அண்மையில்தான் எடுத்துப் பார்த்திருக்கிறார்கள்.எந்த அளவுக்கு ஊறி இருக்கிறது என்று பார்த்தார்களோ என்னவோ?

"நான் யானையை சுட்டுகொன்று  தந்தங்களை வைத்திருக்கவில்லை. காசு கொடுத்து வாங்கி வைத்திருக்கிறேன்" என்று மோகன்லால் சொல்லியதையும்  ஏற்காமல் வழக்குப் போட்டவர்கள் அந்த  குற்றத்தை  நிருபித்திருக்க வேண்டாமா?

மானை சுட்ட சல்மான்கானையே நிரபராதி என்று சொல்லவில்லையா? குடிபோதையில் காரை ஓட்டி சாகடித்ததும் சல்மான் இல்லை என்று தீர்ப்பு எழுதிய நாடுதானே இது?எதையாவது சொல்லி பிரபலங்களை  மேலும்மேலும் புகழேணியில் ஏற்றி விடுவதுதானே  வழக்கம்?

ஆனால் மோகன்லால் குறுக்கு வழியில் போகாமல் கேஸ் போட்டவர்களே நிரூபிக்கட்டும் என்று  இருந்து விட்டார்.

அன்றைய முதல்வர் உம்மன்சாண்டியின் கவனத்துக்கு போனது. பாரஸ்ட் இலாகா மந்திரியை கூப்பிட்டு என்னன்னு கவனிய்யா என்று சொல்ல  அவரும் அதிகாரிகளைவிரட்ட  அவர்கள் பைலை புரட்டுவதற்குள்  மக்கள் ஆட்சியையே மாற்றி விட்டார்கள்.

தேசிய விருது பெற்றவர் என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை,உங்கள் புலனாய்வை சீக்கிரமே முடியுங்கள் என்று கோர்ட்டு சொல்லி இருக்கிறது.

மோகன்லால் குற்றவாளியா இல்லையா என்பது எப்போது தெரியும்?

வெயிட் பண்ணிப்பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...