புதன், 19 அக்டோபர், 2016

அழகான பெண்டாட்டியா இருக்கணும்னா...?

"அவளிடம் பெரிய மர்மம் இருக்கும் போலிருக்குடா...ஊமை குள்ளி ?"

"கொஞ்ச நாள் பழக்கத்திலேயே அப்படி என்ன மர்மத்தை கண்டே?"

"பெரிய ரகசியம்டா!"

"அப்படி என்ன பெரிய ரகசியம்?"

"பிறப்பு  பத்தி!"

"இப்படியெல்லாம் ஒரு பெண்ணை பத்தி அபாண்டமா சொல்லாதே!"

"பின்னே...பிறந்த வருஷத்த சொல்ல மாட்டேங்கிறாளே!"
****************

அப்பா: " மகனே! உனக்கு  எப்படிப்பட்டவ  மனைவியா வரணும்னு  கடவுளிடம் கேப்பே?"

மகன்: "அழகானவளா....அன்பானவளா...அடங்கிநடக்கிறவளா....பணக்காரியா 
இருக்கணும்னு  வேண்டிப்பேன்"

அப்பா: " நீ  கொடுத்து வச்சவன்டா! நான்தான் பாழாபோயிட்டேன்!"
******************

"நண்பா...உன்னை பார்க்கிறபோதெல்லாம்  அந்த ஞானிதான் ஞாபகத்துக்கு வர்றாருடா! பெரிய மேதை!"

"ரொம்பவும் புகழாதேடா! யாரு மச்சி  அந்த மேதை?"

"டார்வின்!"
***************

"எனக்கு வந்து பிள்ளையா பிறந்திருக்கியே? என்னோட  சின்ன வயசிலே  ஒரு பொய் கூட  சொன்னதில்ல!"

"அப்ப எந்த வயசிலேர்ந்து ஸ்டார்ட் பண்ணுனே டாடி?"
********************

"அந்த கேண்டில் லைட் வெளிச்சத்தில  நீயும் அவனும் எப்படிடி  படிக்க முடியிது?"

"லிப் ரீடிங் படிக்கிறதுக்கு  அந்த வெளிச்சம் போதும்"!
****************
படம்  உதவி. நெட்டில் சுட்டது.

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...