சனி, 8 அக்டோபர், 2016

ரெமோ, தேவி, றெக்க--எது பெஸ்ட்?

நவராத்திரி தொடர்விடுமுறையை கணக்கில் எடுத்துக் கொண்டு தீபாவளிக்கு முன்னதாகவே  கல்லா கட்டுவதற்காக  வெளியாகிய படங்கள்தான் ரெமோ,தேவி,றெக்க.! நான் எழுதப்போவது  விமர்சனம் அல்ல! ஒரு சாதாரண  தரை டிக்கெட் ஆசாமியின் பார்வை எப்படி இருக்கலாம் என்கிற கற்பனையே!

மக்கள் செல்வன் விஜயசேதுபதியின் இரண்டு படங்கள் வெள்ளித்திரையில் மின்னிக் கொண்டிருக்கும்போதே மூன்றாவதாக வந்திருப்பதுதான் றெக்க.தற்போதைய தமிழ்ச்சினிமாவில் இது அசாதாரணம்.பக்கத்து வீட்டுப்  பையன் என்கிற இமேஜ் இன்றுவரை இவருக்கு கை கொடுத்து வருகிறது. 'செம' என்பது இவரது தேசிய வார்த்தை.'இது எப்டி இருக்கு?'என்பது ஒரு காலத்தில் ரஜினிக்கு புகழ் தேடித் தந்ததை போல. இவரது  'செம'!

நம்ம வீட்டுப்பையன் என்கிற இமேஜ் சிவகார்த்திகேயனுக்கு.! எவ்வளவுதான்  சேட்டை பண்ணினாலும் வீட்டார்கள் கோபிப்பதில்லை. அதில் இருக்கிற  குறும்புத் தனத்தை தேடிப்பிடித்து ரசிப்பதைப் போல இவரது படத்துக்கும் ஆதரவு இருக்கிறது.

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்கிற புகழ் மட்டுமே பிரபுதேவாவுக்கு! அடிஷனல் குவாலிபிகேஷன் நயன்தாராவின் முன்னாள் காதலன். நடனம் ஆடுவதில் இன்றுவரை இவரை எந்த நடிகரும் விஞ்சவில்லை. குறிப்பாக 'தேவி'யில் இவரது ஆட்டம் பலருக்கு சவாலாகத்தான்  இருக்கும்.

ஆக மூன்று படங்களின் கதாநாயகர்களின் படங்களும் வெவ்வேறு ஜார்னர்!

வி.சேதுபதியின் படம் வழக்கமான ஒன்றுதான்! காதலர்களை சேர்த்துவைத்து  சமூக சேவை செய்பவர். சொந்த தங்கையின்  திருமணம்  வில்லனின் கை வாளில் தொங்குகிறது.இதிலிருந்து எப்படி மீள்கிறார் ,லட்சுமிமேனனை கைப்பற்றுகிறார் என்பது  மீதி ! பல படங்களை நினைவு படுத்துகிற காட்சிகள் ! ரசனை மிகுந்தவர்களின் கதாநாயகனான  இவரை ஜனரஞ்சகமான நாயகனாக மாற்றுகிற முயற்சியே இந்தப்படம் என நினைக்கிறேன்.

காதலை வெறுக்கிற சிவகார்த்திகேயன் வேலை தேடும் முயற்சியில் நர்ஸாக வேடமிட்டு நடிக்கப்போய் கீர்த்தியின் மீது காதல் கொள்கிறார். ஏற்கனவே  நிச்சயிக்கப்பட்டவர் கீர்த்தி. அது எப்படி மறுக்கப்பட்டு சிவகார்த்திகேயனுடன்  சங்கமம் ஆகிறது என்பது சுருக்கம்.படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் சிவகார்த்திகேயனின் நர்ஸ் வேடம்தான். கீர்த்தியுடன் பல இடங்களில் யார் அழகு என கேட்க வைக்கிறார். ஒப்பனை, பி.சி.ஸ்ரீ ராமின் ஒளிப்பதிவு  இரண்டும் கண்களை குளிரவைக்கிறது. கீர்த்தி சுரேஷ் நடிப்பும் பேச வைக்கிறது. படத்தில் லாஜிக் குறைகள். ஏனைய படங்களை  ஒப்பிட செய்யும் காட்சிகள் என குறைகள். உதாரணமாக  அவ்வை சண்முகியில் மணிவண்ணன் கமலை விரட்டியபடி காதலிப்பதைப் போல இதில் யோகி பாபு!

தேவி யில் லாஜிக் ஓட்டையை தேடவேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் அது ஆவி படம்.மற்ற ஆவி படங்களில் இருந்து வேறுபட்டிருப்பது  இதன் சிறப்பு. நடிப்பு ஆசை நிறைவேறாமல் போன ரூபியின் ஆவி தமன்னாவின் உடலில் புகுந்து கொண்டு இம்சிப்பதுதான் கதை.

கதைக்களம் மும்பை. பிரபுதேவாவின் அற்புதமான நடிப்பு ஆடல் என வெடிக்கிறது. தமன்னாவின் உடல் அழகு தெறிக்கிறது.காமடிக்கென தனி நடிகர்கள் தேவைப்படவில்லை. இருந்தாலும் ஆர்.ஜே .பாலாஜியை  அளவுடன் திறந்துவிட்டிருக்கிறார்கள்.படம் ஓடி முடிந்தது தெரியவில்லை.
காரணம் இரண்டு மணி நேரம்தான் படம் ஓடுகிறது.

மூன்று படங்களையும் பார்த்துவிட்ட நான் என் நண்பர்களுக்கு  பரிந்துரைத்தது தேவி,ரெமோ,றெக்க என்கிற வரிசையில்தான்!  

1 கருத்து:

மணியன் சொன்னது…

இந்த பதிவைப் பற்றிய உங்களது கருத்தை சொல்லலாம்.குற்றம் இருந்தால் தட்டி வைக்கலாம்.

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...