திங்கள், 17 அக்டோபர், 2016

கவியரசர் கண்ணதாசனுக்கு அஞ்சலி.

திரைப்படக் கவிஞர் வேல்முருகன் எழுதிய கண்ணதாசனுக்கு  அஞ்சலி.
நாலுபேருக்கு நன்றி
அந்த நாலுபேருக்கு நன்றி 
என்று பாடினாய்
அதனைக்கேட்ட ஒரு நாலுகோடி பேராவது
அந்த ரெண்டுபேருக்கு நன்றி 
உன்னைப் பெற்ற ரெண்டு பேருக்கு நன்றி சொல்வார்கள்

என் தாத்தா காலத்தில் 
என் அப்பா அம்மா காதலிக்க
பாட்டையையும் கொடுத்தாய்
என் பாட்டியை இழந்து வாடிய எம்பாட்டனுக்கு
உன் பாடலால்
அமைதியையும் கொடுத்தாய்.

உலகத்து தங்கச்சிக்களுக்கெல்லாம்
உன்பாட்டு ஓர் அன்னை 
அண்ணன் தங்கை
பாசம் என்றாலே
திசை காட்டும் உன்னை.

அண்ணன் தம்பி அக்கா தங்கைக்கு என
ஓடிஓடி உழைத்தவர்களை
அக்குடும்பம் நடுத்தெருவில் நிறுத்தும்போது
'போனால் போகட்டும் போடா' என்று தேற்றியதில்
கோபத்தை மறந்து 
சிரித்தவர்கள் எத்தனையோ..
கவிஞரைப் பாட எடம் பத்தலையே..

நீ நிரந்தரமானவன்
எப்ப செத்த ?
எந்த நிலையிலும் 
மக்கள் மனங்களில் நிப்ப..! 
    வேல்முருகன்.

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...