வியாழன், 13 அக்டோபர், 2016

பாரதிராஜா சாட்டையை சுழற்றுவாரா?

ஒரு காலத்தில் இன, மொழி உணர்வுடன் தமிழ்ச்சினிமா இருந்தது. அது ஒரு பொற்காலம்.

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என பெருமை பேசினார்கள். அதாவது  இவர்கள் வள்ளல்களாம். வந்தேறிகளுக்கு இவர்கள் வாழ்வு கொடுத்திருக்கிறார்களாம். வாய்தான் கிழிந்தது. இப்போது  என்ன ஆயிற்று?

வந்தேறிகளின்  ஆசியில் இவர்கள்  வாழ்கிற நிலை!தமிழர்கள் எடுக்கும் படங்களுக்கு தியேட்டர்கள் கொடுப்பது அயல் மாநிலத்தாரின் கைகளில்! அவர்கள் கொடுத்தால் உன்னுடைய படம் ஓடும் .கொடுக்காவிட்டால்  சாம்பிராணி புகையை போட்டு பெட்டியை மூட வேண்டியதுதான்!

கேட்டால் கலைக்கு மொழிகள் இல்லை என்கிற சித்தாந்தம்.

முன்பெல்லாம் பாரதிராஜா மேடையேறும் போதெல்லாம் . "பிற மாநில நடிகைகள் தமிழ் பேச கற்றுக்கொள்ளவேண்டும் "என்று எச்சரிப்பார். அவர் இப்போதெல்லாம் அதிகமாக மேடை ஏறுவதில்லை. அவரைப் போல தைரியமுடன் பேசுவதற்கும் ஆள் இல்லை.

ஆனால் ஆந்திராவில் தாசரி நாராயணராவ் என்கிற பிரபல இயக்குநர் நம்ம பாரதிராஜாவாக அங்கு மாறியிருக்கிறார்.

அண்மையில் ஒரு படவிழாவில் பேசிய அவர் மொழி உணர்வுடன் எச்சரித்திருக்கிறார்.

கவலையுடன் அவரது கருத்து பதிவாகி இருக்கிறது.

"தெலுங்கு பட உலகம் மெதுவாக இங்கிலிஸ் மயமாகி வருகிறது.பிற மாநிலங்களில் இருந்து வருகிறவர்கள் முதலில் தெலுங்கு மொழியை  கற்றுக்கொள்ளவேண்டும்.இது எனது தாழ்வான கோரிக்கை. கடுமையான எச்சரிக்கை.அறிவுரை.! நான் பங்கு கொள்ளும் சினிமா விழாக்களில்  நடிகைகள் தெலுங்கில் பேசாவிட்டால்  அந்த விழாவை புறக்கணித்துவிட்டு வெளியேறவும் தயங்க மாட்டேன்" என எச்சரித்திருக்கிறார்.

இவர் முன்னாள் மத்திய மந்திரியாகவும் இருந்திருக்கிறார்.

இவரைப் போல  தமிழ் நாட்டில் எச்சரிப்பதற்கு  எந்த இன மான தமிழர்  இருக்கிறார்?

பாரதிராஜாவை விட்டால் வேறு நாதி இல்லையா?

வெட்கமாக இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...