புதன், 26 அக்டோபர், 2016

நடிகைகளின் அந்தரங்கம் பேசுகிறது.

அடுப்பில் நெருப்பு எரிந்தால் உலை கொதிக்க செய்யும். கொதி  நிலை தாண்டுகிறபோது உலை  வழிந்து நெருப்பை  அணைக்கப்பார்க்கும்.!

அதைப்போலத்தான் மனித மனங்களும்!

தாங்குகிற சக்தியை கடக்கிற நிலையில் மனதில் கொதிப்பவை வெளியே வந்து விழும்.

அப்படித்தான் அனுஷ்கா சர்மாவும் ,கங்கணா ரணாவத்தும்!

அனுஷ்காவை பற்றிய காதல் கதைகளை பக்கம் பக்கமாக  பூடகமாக  ஊடகங்கள் எழுதித் தள்ளின.

அவையெல்லாம் உண்மைதானா?

"நான் மிகவும் பிராக்டிகலான பெண்.! கண்டவுடனேயே காதல் என்பதெல்லாம்  கட்டுக்கதை. அதில் எனக்கு நம்பிக்கை இல்லை.நான் ஒன்றும் முட்டாள் இல்லை. பார்த்ததுமே காதல் வயப்படுவதற்கு! அப்படியெல்லாம் விழுந்து விடமாட்டேன்." என்று அழுத்தமுடன் சொல்லியவரிடம் " இதெல்லாம்  காதலில் அடிபட்டவரின் வார்த்தைகளாக தெரிகிறதே?" என்றதும் அந்த நடிகை சிரிக்கிறார் கலகலவென!

"நான் காதலிக்கவே இல்லையே. காதலித்தால் அல்லவா தோற்பதற்கு!" என்கிறார்.

அப்படியானால் விராட் கோலி?
*******************

கங்கணா ரணாவத் பற்றி தெரியுமா?

தமிழ்ப்படத்திலும் நடித்திருக்கிறார்.

 போலியாக சிரிப்பவர்களுக்கு விருது கொடுத்தால் யாருக்கு கொடுக்கலாம் என்று இவரிடம் கேட்டதற்கு பட்டென சொன்ன பதில் 'பிரியங்கா சோப்ரா"

அப்படி என்ன இவர்களுக்குள் முட்டல் மோதல்?

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...