படிப்பதற்கு சற்று சலிப்பு தரலாம்.
ஆனால் சில உண்மைகள் கசந்தாலும் அது காலம் காலமாக இருந்து வருபவை.இலக்கியத்திலிருந்து எடுத்துக் கையாள்வது வேறு.அதையே தனது படைப்பாக திரிப்பது திருட்டு.மேலை நாட்டு கதைகளை திருடுவது தமிழ்ச்சினிமாவுக்கு புதிது இல்லை. இதைப் போல இலக்கிய வரிகளை தனது பாடல்களில் சொந்த சரக்கு என சொல்லி பெயர் பெறுவது இன்றும் நடக்கிறது.
பேராசிரியர் தி.ராஜகோபாலன் எழுதிய ஒரு கட்டுரையை இன்று காலை வாசிக்க நேர்ந்தது,அதை பகிர்ந்து கொள்வதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. தவறு என நினைத்தால் மன்னித்துவிடுங்கள்.
இதோ அவரது கருத்துகள்.!
"முதுமொழிகளை நாடித் திருடி,ஒருபடி நெருடிக் கவிபாடித் திரியும் சில புலவர் ' , 'தெரியும் அருமை பழைய மொழியைத் திருடி நெருடிக் கவி பாடி'என அருணகிரியார் அடையாளம் காட்டுகிறார்.
சீத்தலைச் சாத்தனார் திருக்குறளில் இருந்து ஒரு செய்தியை எடுக்கிறபோது 'அறம் பாடிற்று அன்றே ஆயிழை கணவ'என்றார்.
பாரதி தனது பாஞ்சாலி சபதம் வியாசரைத் தழுவியது.தமிழ் நடை மட்டுமே தன்னுடையது என்றார்.
'சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே நில்லென்று எனக் கூறி நிறுத்தி வழிச்சென்றவரே ' எனும் வரிகளை பல்லவியாக அமைத்தபோது இதனை நாட்டுப்புறப் பாடலில் இருந்து எடுத்தேன்' என கம்பீரமாக ஒப்புக் கொண்டார் கண்ணதாசன்.
ஒரே ஒரு பாடல் பொருளை வைத்துக் கம்பர் பாடிவிட்டார் என கேட்ட ஒட்டக்கூத்தர் தாம் பாடிய இராமாயணத்தில் உத்திர காண்டத்தைத் தவிர மற்றவற்றை எரித்துவிட்டார்.
கண்ணகி காதையை சீத்தலைச்சாத்தனார் பாடத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அத்துயரக் கதையைக் கேட்ட இளங்கோவடிகள் "நாட்டுதும் யாமோர் பாட்டுடைச்செய்யுள் " எனத் தொடங்கிவிட்டதால் சாத்தனார் மாதவி மகள் மணிமேகலை காப்பியத்திற்கு மாறிவிட்டார்.
ஆனால் நம் முன்னோர்கள் காத்த கண்ணியம் இன்றில்லை!
கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமன்று.ஏட்டுக்கும் எழுத்துக்கும் கூடத் தேவை.
இவ்வாறு பேராசிரியர் தி.இராசகோபாலன் கவலைப்பட்டு எழுதி இருந்தார்.
காலங்கள் கடந்தும் எழுத்துத்திருட்டு இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.