Thursday, November 3, 2016

உலகை உலுக்கிய எட்டு விலைமகளிர்!

ஆதியில் இருந்து இன்றுவரை இளைக்காமல் செழித்து வந்திருக்கிற  தொழில் என சிலர் சொல்கிறார்கள்.

ஆண்டவனின் சேவைக்காக படைக்கப்பட்டவர்கள் என்பது சிலரின் வாதம்.

இலக்கியங்களில் விலைமகளிர் இருக்கிறார்கள்.சரித்திரத்திலும் இருக்கிறார்கள்.

நெப்போலியன்,இரண்டாம் சார்லஸ் மன்னர் இவர்களைப் போல இன்னும்   பலரும் வேசி வீட்டு மஞ்சத்தில் படுத்துக் கிடந்தவர்கள்தான்!

மனைவியிடம் இல்லாதது இவர்களிடம் இருக்கிறது என்று அவர்கள் அதிசயித்து சென்றதில்லை.காமவிளையாட்டில் அவர்களுக்கு 'திறமை' இருந்தது என்பதால்தான்  தேடிப் போயிருக்கிறார்கள்.

இன்றைய அரசியல் தலைவர்களும் காம விளையாட்டில் களைத்து போனவர்கள்தான்! இளைப்பாறலாம் என்று சென்றவர்களுக்கு அதுவே  பசுஞ்சோலையாகிப் போனது.

இன்னொரு வியப்பும் புருவங்களை உயர்த்துகிறது.

ஆண் விபசாரகர்கள்.

 சென்னையில் கார் வைத்து அழைத்துப் போகிறார்களாம். எனக்கு அப்படி ஒரு  வாய்ப்பு வந்ததில்லை.வரப்போவதும் இல்லை.

உலக அளவில் இன்றளவும் பேசப்படுகிற விலைமகளிர் பற்றிய ஒரு சிறு பதிவு.

லுல்லு ஒயிட். நியூ ஆர்லியன்ஸில் சிவப்பு விளக்கு சித்திரப்பாவை.
கடைந்தெடுத்த கட்டுடல்.ஆயிரத்து  தொன்னூறுகளில் இவளிடம் நாற்பது  அழகிகள் இருந்திருக்கிறார்கள். சிறப்பு விருந்தினர்களுக்காக பதினைந்து படுக்கை அறைகள். இலவச 'இணைப்புகள்" இருந்தனவா சலுகைகள் வழங்கப்பட்டனவா என்பது தெரியவில்லை.ஆனால் 'ஜாஸ்' பாடல்கள் இலவசம்! பிரபலமானவர்களுக்கு மட்டுமே இவளது உறவு கிடைத்திருக்கிறது.

நெல்கின்.குடும்பமே காம ரசம் வழங்கியது. என்றாலும் இவளின் கவனம் பழ வியாபாரத்தில் என ஒதுங்கி நின்றது. ஆனாலும் ஆண் வர்க்கம் விடுவதாக இல்லை. மன்னர் இரண்டாம் சார்லஸ் தனது படுக்கை அறையில் சிறப்பு விருந்தாளியாக சேர்த்துக் கொண்டுவிட்டார்.

வசீகரமாக வார்த்தையாடுவதில் கோரா நாவுக்கரசி! பிறந்தது  இங்கிலாந்து என்றாலும் நாக்கில் விளையாடியது பிரெஞ்சு மொழிதான்!அழகி.படித்தவள் என்கிற தகுதிகள் இவளை உயரம் கொண்டு சென்றது. ஒய்யாரமாக இவள் நிர்வாணம் காட்டியபோது பிரபுக்கள் நிலைகுலைந்துதான் போயிருக்கிறார்கள். சாம்பெய்னில் இவளது நிர்வாணக் குளியல் தனி கவனம் பெற்றது.அவள் குளித்த சாம்பெய்னை மாந்தி மாந்தி அருந்திமகிழவும் ஒரு  கூட்டம் இருந்திருக்கிறது.

கவர்ச்சி நடிகை மர்லின் மன்ரோ.பாடகியும் கூட.

ஒரு நாளைக்கு ஐநூறு டாலர். நடிகர்கள்,டைரக்டர்கள் ஆகியோரின் இரவு தேவைகளுக்கு இவள்தான்  இன்ப ராணி!அழைப்புகள் வந்தாலும் மர்லின் செல்வாள்.

சால்லி. பதினெட்டாம் நூற்றாண்டு காமப் பதுமை. சின்ன வயதிலேயே சிற்றின்ப விளையாட்டுகளில் சிறப்பு பதக்கம் ! தொழில்நுட்ப நுணுக்கம் அறியாத காலமாக இருந்ததால் நோயும் தொற்றியது. இதன் தாக்கமோ என்னவோ பலரை கத்தியால் குத்தியும் அனுப்பி வைத்திருக்கிறாள்.

ஜேன் வித்தியாசமானவள்.துப்பாக்கியும் கையுமாக அலைந்தாள். பலருக்கு இலக்காக இருந்த இவளின் துப்பாக்கிகளுக்கு இரையானவர்கள் அமெரிக்க இந்தியர்கள். கவ் பாய்ஸ்தான் இவளது இனிய தேடல்!

இன்னும் பல விபசார வித்தகிகள் சரித்திரத்தில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

No comments:

ரஜினி முந்துவாரா கமல்ஹாசனை?

அதென்னவோ கடவுளை நம்புகிறவர்களுக்கு பலன் என்னவோ கை கால்  ஓய்ந்த பின்னர்தான் கிடைக்கிறது. பல பேருக்கு சொர்க்கத்தில் கிடைக்கும் என்பது நம்பி...