சனி, 12 நவம்பர், 2016

'ஸ்ரீ' இல்லாததால் ஐயப்பன் பக்தர் ஜேசுதாஸ்க்கு வந்த சோதனை!

" யார் என் பாடலில் குறை கண்டது?"

சிவபெருமான் சிவாஜி கணேசன் கனன்று  நெற்றிக்கண் திறந்தது மாதிரி எதுவும் நிகழவில்லை !

ஆனால் ஜேசுதாஸ் பாடிய 'ஹரிவராசனம் ...விஸ்வமோகனம்' என்கிற  பாடலில் குறை கண்டிருக்கிறார்கள்.

பல்லாண்டுகளாக சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் அதிகாலையில் ஒலிபரப்பாகி வந்தது அந்த பாடல். ஜேசுதாஸ் மனம் கசிந்து பாடியிருந்தார். அய்யப்பனது பக்தர்கள் அனைவர்க்கும் அது அமுதகானமாக திகழ்ந்தது. சபரிமலை சீசன் காலத்தில் எல்லைகள் கடந்து ஒலிபரப்பாகிய பாடல்.

இந்த பாடலில் 'பிழை 'இருப்பதாக இப்போது சொல்கிறார்கள்.நல்ல வேளை இந்த பிழைக்காக பகவான் ஐயப்பன் யாரையும் தண்டித்துவிடவில்லை .அவரை  துடியான தெய்வம் என்பார்கள்.

சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் தலைவர் ,பாடகர் கே.ஜி.ஜெயன்தான்  தகவலை வெளியிட்டிருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக அந்த பிழை எப்படியோ உயிர் பிழைத்து வாழ்ந்திருப்பது ஆச்சரியம்தான்!

"அந்த பாடலில் 'ஸ்ரீ 'என்பது விடுபட்டிருக்கிறது பல இடங்களில் !சின்னத்திருத்தங்களுடன்  அதை தலைமை தந்திரியிடம் காட்டி அனுமதி பெற்று ஜேசுதாசை மறுபடியும் பாட செய்வோம்.அடுத்த ஆண்டு மகர விளக்குக்கு முன்னதாக இந்த பணி நிறைவு பெற்று விடும்" என்று சொல்லியிருக்கிறார்.

இதற்கு முந்தைய ஆட்சிகாலத்தில் தென்படாத குற்றம் பொதுவுடைமைக் கட்சியின் காலத்தில்தான் ...அதுவும் பாஜக பிரமுகர் ஒருவரது பார்வையில்தான் பட்டிருக்கவேண்டுமா?

நல்லா இருக்குய்யா உங்க சம்ஸ்கிருத பற்று...!

கடவுளையாவது வாழ விடுங்கய்யா!

 

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...