செவ்வாய், 22 நவம்பர், 2016

அதிமுகவின் சுப்ரீம் பவர் சசிகலாதான்!

ஆண்டியின் கோவணத்தை அவிழ்த்துப் பார்த்தால் .....

என முந்தைய பதிவு ஒன்றில் சொல்லியிருந்தேன். ஒரு தொகுதியில் திமுக  வர வாய்ப்பு இருக்கலாம் என சொன்னது பொய்யாகிப் போனது.

மூன்று தொகுதியிலும் ஆளும் அண்ணா திமுக வெற்றி பெற்றிருக்கிறது.

"படுத்துக் கொண்டே ஜெயிப்போம் " என சொல்லி வருகிறார்கள்.அது இயல்புதான்!

கடுமையான பணத் தட்டுப்பாடு, ஐநூறு, ஆயிரம் ரூபா தாள்கள்  வெறும் காகிதமாகிப் போன நிலையில் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து விட்ட நிலையில் பாஜகவுக்கு மூன்றாவது இடம் கிடைத்திருக்கிறது.

இது பாஜகவின் வளர்ச்சியை மட்டும் காட்டவில்லை. தேமுதிகவின் கடுமையான வீழ்ச்சியையும் படம் பிடித்திருக்கிறது. மக்கள் நலக் கூட்டணியின்  எதிர்காலத்தையும் கேள்விக்குறி கவ்வி இருக்கிறது. அந்த கூட்டணி எதிர்வரும் காலத்தில் ஏதாவது ஒரு திராவிடக் கட்சியிடம் சரண்  அடைந்தால் மட்டுமே வாழ்வு என்பதையும் சுட்டி இருக்கிறது.

ஆட்சியில் இருந்ததால் மட்டுமே அதிமுகவுக்கு வெற்றி சாத்தியமாகி இருக்கிறது.அதிகாரபலம் பண பலம் இரண்டும் அந்த கழகத்துக்கு துணையாக இருந்தது என்பதை யாரும் மறுக்க இயலாது. சசிகலாவின் சாணக்கியம்  கழகத்தவரிடம் ஒரு பிம்பத்தை உருவாக்கி இருக்கிறது. முதல்வர் முழுமையாக குணம் அடையும்வரை அவர்தான் அதிமுக.!

திமுகவின் உள்கட்சி பிரச்னை ,கட்டுக்குள் அடங்காத போக்கு அந்த கழகத்தை காவு வாங்கிவிட்டது. அனுசரித்துப் போதல் என்பது தொண்டர்களைப் பற்றியதாகவே இருக்கவேண்டும்.ஆனால் தனிப்பட்டவரை சார்ந்து போவதே  அனுசரித்துப் போவது என அர்த்தம் கற்பித்ததால் அந்த கழகத்தில் ஆதிக்க போக்கு தலை தூக்கி இருக்கிறது.இது அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணம்.

ஒரு பாமரனின் நிலையில் இருந்து இந்த பதிவை எழுதி இருக்கிறேன்.

தவறு என்றால் சுட்டிக்காட்டுங்கள்.


கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...