சனி, 26 நவம்பர், 2016

கேப்டன் என்ன செய்யவேண்டும்?

சுழன்று அடிக்கும் சுழல் காற்றைப் போல கேப்டனின் தேமுதிக.!

வீச்சுப் பலம். திமுக,அதிமுக என வலிமையான மரங்களின் வேர்களையே ஆட்டிப் பார்த்துவிட்டது. சுழலும் புயலும் நிரந்தரம் இல்லை என்றாலும் அதனுடைய  வீச்சு சேதாரத்தை அதிகமாக்கியது. கலைஞரையும் , அம்மாவையும் அச்சப் படுத்தியது என்றால் பார்த்துக் கொள்ளலாம்.

வளமும் பலமும் பார்த்தே ஆதரவை நல்கும் மீடியாக்களும் கேப்டனுக்கு லாலி பாடின!  மீடியாக்களின் தயவில் கட்சியை வளர்க்கும் சின்ன கட்சிகளும் விஜயகாந்தின் துணையுடன் தங்களின் தோற்றத்தை பிரமாண்டப்படுத்திக் கொண்டன.

ஆனால் விஜயகாந்தின் சுகவீனம் அவரை மட்டுமல்ல அவரது கட்சியையும் அவருடன் சேர்ந்தவர்களையும் படுக்கவைத்துவிட்டது.இடைத்தேர்தல் முடிவுகள் சிக்கன் குனியாவா பன்றிக் காய்ச்சலா என இன்னமும் ஆராய்ச்சி கூடத்தில்!

விஜயகாந்தின் குடும்ப அரசியல்தான்  தேமுதிகவின் வீழ்ச்சிக்கு அடித்தளமாகி இருக்கிறது என்பது  சத்தியம் .தொண்டர்கள் திருமதி பிரேமலதா அம்மையாரின் பிரவேசத்தினால் மிரண்டு போயிருக்கிறார்கள். எவ்வளவு வேப்பிலை அடித்து மந்திரித்தாலும் மிரட்சி நீங்கப்போவதில்லை என்கிறார்கள்.

கேப்டனை பார்த்துதான் அவரின் அரசியலை ரசிகர்கள் நம்பினார்கள்.அவரது படத்தின் வசனங்களும் காட்சிகளும் அவரது இமேஜை உயர்த்திக் காட்டின. எதையெல்லாம் படங்களில் கண்டித்தரோ அவையெல்லாம் அவரது கட்சிக்குள்ளேயே அரங்கேறியது .

அது வீழ்ச்சிக்கு விதை ஆகியது.

கிட்டத்தட்ட அதிமுகவின் அம்மாவும் சின்னம்மாவும் போல தேமுதிகவிலும் !

கூட்டணி சேர்ந்த வைகோவின் வாக்குமூலம் விஜயகாந்துக்கு மிகுந்த பின்னடைவு!

முதல்வர் பதவிக்கு கேப்டன் தகுதி இல்லாதவர் என்பதைப் போல  மறைமுகத் தாக்குதலாகவே வைகோவின் வாதம் அமைந்திருந்தது.

அவரது அரசியலே தாக்குவதும், தாக்கியவரை தாங்குவதும்தான்! அவரது  கூடாரம் காலியாக கிடப்பதைப பற்றிய கவலை இல்லாமல் அடுத்தவரின்  கூடாரம் பற்றி கேலி பெசுகிரவர்தான் வைகோ!

இவர்களைப் பற்றி கவலைப்படாமல் தேமுதிகவின் அடிமட்டத் தொண்டர்களின் ஆதரவை ,நம்பிக்கையை கேப்டன் பெற்றாக வேண்டும். அது முடியுமா, ?

களம் இறங்கிப் போராட வேண்டும். முடியுமா ?

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...