திங்கள், 28 நவம்பர், 2016

காமக் கொடூரன்களை காய் அடியுங்கள்!---நடிகை போர்க்குரல்!!

போகத்துக்குரியவளா பெண்?


போகிற போக்கில் சிறுநீர் கழித்துவிட்டுப் போவதைப் போல் ஆகிவிட்டது பெண்களுக்கு எதிரான வன்முறைகள்.!

தன்னை கற்பழித்துவிட்டான் என புகார் தெரிவித்தால் அவன் உன்னை எங்கெங்கு தொட்டான், அப்படி தொடும்போது சுகமாக இருந்ததா இணங்கித்தானே அவனுடன் இருந்திருக்கிறாய் என 'நாகரீகமாக ' வழக்குரைஞர்கள் கேட்கிறபோது 'தொழில் தர்மத்தின் உயரம்' எத்தனை  பெண்களின் கற்பு, ஒழுக்கத்தைக் கொன்று விட்டு அதன்   மீது அமர்ந்திருக்கிறது என்பது புரிகிறது!

காமுகர்களின் எளிதான இலக்குகளாக தலித் பெண்கள்தான் இருக்கிறார்கள். உயர்சாதியினரின் அரக்கத்தனத்துக்கு இரையாவது  அவர்கள்தான்!

அண்மையில் கேரளத்தில் தலித் பெண்ணை வன்புணர்வு செய்துவிட்டு  அவளை கொலை செய்து விட்டார்கள்.அறிவு ஜீவிகள் அதிகம் வாழ்கிற  மாநிலம் என்கிற பெருமை வேறு!

பெரும்பாவூர் வந்திருந்த முன்னாள் நடிகை மீரா ஜாஸ்மின் பெண்ணியக்கவாதிகளை  அழைத்துக் கொண்டு பத்திரிகையாளர்களை  சந்தித்தார்.

அவர் சொன்ன ஆலோசனை  ஒருவகையில் ஏற்புடையதாகவே இருந்தது.

''அப்பாவிப் பெண்களை வன்புணர்வு செய்கிறவர்கள் வாழ்நாள் முழுவதும்  வலியை சுமந்தாக வேண்டும். அப்போதுதான் அத்தகைய கொடூரன்களுக்கு அச்சம் இருக்கும்!

அவர்களை காயடித்து விடுங்கள்! இதுதான் ஒரே வழி! இதைத் தவிர  வேறு  வழி இல்லை!"என அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார்  மீரா ஜாஸ்மின்!

வரவேற்க வேண்டிய யோசனை!

நடிகை டாப்சி முன்யோசனையாக சில சொல்லியிருக்கிறார்.

"வன்முறையாளர்களிடம் இருந்து தப்புவதற்கு சில மரண அடிகளை பெண்கள் கற்றுக்கொள்ளவேண்டும்!"

சரிதானே! என்ன சொல்கிறீர்கள் மக்களே?


1 கருத்து:

Avargal Unmaigal சொன்னது…

சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...