வியாழன், 3 நவம்பர், 2016

முக்தர் மாய்.....ஊக்கத்தின் மறுபெயர்.

அழகான பெண்.ஓங்கு தாங்கான உருவம்,முக்தர்மாய்.

ஆணுக்கு கீழ்தானே என்கிற ஆதிக்கத்துக்கு எதிரானவள் தாழ்வு எண்ணங்களுக்கு தடை போட்டுக்கொண்டவள். கருத்துகளுக்கு பதில் கருத்து சொல்வதில் என்றுமே இவள் களைத்துப் போனவள் இல்லை.

பாகிஸ்தானின் இவள் ஒரு அதிசயம்தான்! தீவிரவாதத்தின் உறைவிடமாகிப் போன கலவரப்  பூமியில் பூத்த வெள்ளைத்தாமரை.

ஜோபர்கார் மாவட்டம்.மீர்வார் கிராமம்.பணத்திமிர் கொண்ட எருமைகளுக்கு பசுமாடுகளாக ஏழைகள் இன்னமும்வாழ்ந்து வருகிறார்கள்.மோழைகளாக பெண்கள் முடங்கிப் போயிருக்கிற  கிராமம்..

புழுதி அடர்ந்து கிடந்த ஆணவ மண்ணில் கிளர்ந்து எழுந்தாள் முக்தர்மாய்.
கற்ற கல்வி கை கொடுத்தது.

ஆதிக்கமனம் கொண்டோருக்கு பெரு நெருப்பாக மாறிப்போனாள்.

அடங்க மறுத்த இவளை அடக்கிவைப்பது எப்படி?

2002-ஜூன் மாதம் இருபத்திரண்டாம் நாள். அப்துல்மாலிக்கின் ஆட்கள் துப்பாக்கிகள் ,அருவாள் ஆகிய வன்முறை ஆயுதங்களுடன் அந்த ஒற்றைப் பெண்ணை அடக்கி ஆள திரண்டு போனார்கள்.

ரோஜா நிறத்து முக்தர்மாயை வலுக்கட்டாயமாக கடத்திக் கொண்டு ஒரு லாயத்தில் போட்டார்கள்.

முயலின் சத்தம் செந்நாய்களின் நாக்குகளில் நீராக வழிந்தது.

ஒருவர் ஒருவராக வன்புணர்வு.வெறியர்களுக்கு விருந்தாகிப் போன அந்த மெல்லியவளை வேட்டையாடிவிட்டோமே என்கிற குற்ற உணர்வு அவர்களுக்கு இல்லை.அப்துல் மாலிக்கின் அடிமைகள் என்கிற வெட்கம் சற்றும் இல்லை.

அப்படியே தெருவில் வீசி எறிந்தவர்கள் அவளை நிர்வாணமாக ஊர்வலமாக இழுத்து சென்றனர்.

அத்தனை இழிவுகளையும் திடமான மனதுடன் எதிர்கொண்ட முக்தர்மாய் ஊடகங்களின் உதவியை நாடினார். பெண்களது ஆதரவு கரை உடைத்து வெள்ளமாக வந்தது,உலக அளவில் எதிர்ப்பு பாகிஸ்தானுக்கு!

பணிந்த பாகிஸ்தான் அவளுக்கு ஐந்து லட்சம் நிவாரணமாக கொடுத்தது.

ஆனாலும் தன்னைப் போன்ற பெண்களுக்கு உதவுவதற்காக ஒரு அமைப்பை உருவாக்கி போராடுகிற பெண்களுக்கு ஆதரவாக நிற்கிறது பெண் சிங்கமம்

அந்த பெண் முதன்முதலாக பெண்கள் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறாள்.

அவளது போர்க்குணத்துக்கு ராயல் சல்யூட்!

.

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...