சனி, 12 நவம்பர், 2016

சிவனை தூண்டி விடும் நாரதர்

நாரதர் கலகம் நன்மையில் முடியுமா?

சிவன்: " ஏன் நாரதா ...பதற்றமும் பரபரப்பும்? மூச்சிரைக்க வருகிறாயே?"

நாரதர்.: " இந்த பூலோக மனிதர்களுக்கு  நீங்கள் என்றால் மிகவும்  இளக்காரமாக இருக்கிறது? பயம் என்பதே இல்லாமல் போய்விட்டது!"

சிவன்: " விவரமாக சொல்லு எதனால் எம் மீது அவர்களுக்கு  பயம் இல்லை என்பதாக சொல்கிறாய்?"

நாரதர்: " பின்னே என்ன பிரபு? அரசு செல்லாது என்று அறிவித்த ரூபாய் நோட்டுகளை கூட தங்களின் உண்டியலில் போடாமல் அந்த திருப்பதி நாமக்காரரின் உண்டியலில்தானே போடுகிறார்கள். செல்லாத நோட்டும்  உங்களுக்கு கிடையாதா பிரபு?"
****************************************
திமிர் பிடித்த ப்ரொட்யூசர்?

நடிகர்.: " யோவ்...மானேஜர்? அந்த ப்ரொட்யூஸரின்  திமிரை பார்த்தாயா....? எனக்கு தர வேண்டிய பாலன்ஸ் தொகையை ஐநூறு ,ஆயிரம் ரூபா நோட்டு கட்டுகளாக அனுப்பி வைத்துவிட்டதுடன் நில்லாமல்  ,கணக்கு சரியாகிவிட்டது என்று கடிதம் கொடுத்து அனுப்பி இருக்கிறான்யா!"

மானேஜர்.: ????????????????????????
*********************************************
மோடி பெயருக்கு ஸ்பெஷல் அர்ச்சனை!

அர்ச்சகர்.: " யார் பேருக்கு  அர்ச்சனை?"

பெரியவர்.: " எல்லாம் அந்த மோடி  பேருக்குத்தான் சாமி!"

அர்ச்சகர்.: " எதுக்காக இந்த வேண்டுதல்?"

பெரியவர்.: " வரதட்சணையை  இப்ப தர வேண்டாம்.தனக்கு டைம் சரியில்லைன்னு மாப்ளை  சொல்லிட்டாரே.! அதுக்குதான்!"

அர்ச்சகர்.: "???????????????????????
************************************************
டல் அடித்த மாமூல்!

மனைவி.: " என்னங்க வீசுன கையும் வெறுங்கையுமா மணி ஆட்டிட்டு வந்து  நிக்கிறீங்க?"

சப்-இன்ஸ்பெக்டர்.: " கடுப்பை கெளப்பாதேடி! ஓடி ஒளிஞ்ச எல்லா பயலுகளும்  500,1000 ரூபா தாள்களாக கொண்டாந்து  தள்ளுரானுகடி!"

மனைவி.: " நாசமா போறவனுங்க!"
**********************************
கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...