சனி, 26 நவம்பர், 2016

எத்தனை கொலை முயற்சிகள்...மாபெரும் போராளியை சாய்க்க!

சின்னஞ்சிறு நாடுதான் கியூபா. அமெரிக்க வல்லரசுக்கு சவாலாக திகழ்ந்தது.

 அந்த ஜீவ பூமியை கழுகின் கூரிய நகங்கள் கொத்திப்போக துடித்தது.

சிம்மமாக சிலிர்த்து கர்ஜித்தார்  மகத்தான போராளி பிடல்காஸ்ட்ரோ!

ஆதிக்க வெறியர்களின் கொள்ளிக்கண்கள் படாமல் பாதுகாத்தார். அதற்கு  சர்வாதிகாரமும் அவருக்கு தேவையாக இருந்தது.மக்களும் அவரது பக்கம்.அடுத்த நாட்டின் உள்விவகாரங்களில் முள் செடியை அல்ல , மரத்தையே நட்டு வைப்பதில் கைதேர்ந்தது  அமெரிக்க உளவுத்துறை ! துரோகிகளின் துணையுடன் பொருளாதாரத்தையும் சிதைக்கும் ஆற்றல் அந்த வல்லரசுக்கு உண்டு.

அந்த அரக்கனையே மண்டியிட வைத்த மாவீரன் பிடல்  இன்று நம்மிடையே  இல்லை.தனது தொண்ணூறாவது வயதில் இயற்கையின் கரங்களில் ஒப்படைத்துவிட்டார்.

சர்ச்சிலும் சுருட்டு குடித்தார். அதில் எவரும் விஷம் கலக்கவோ,வெடி வைக்கவோ எண்ணியதில்லை.

ஆனால் சுருட்டும் தாடியும் அடையாளமாக கொண்ட இந்த அதிசயமனிதனை கொல்வதற்கு விஷம்,வெடி இரண்டையும் வெவ்வேறு கட்டங்களில் முயற்சி  நடந்தது,

ஆச்சரியப்படாதீர்கள். அறுநூறு முறை பிடல்காஸ்ட்ரோவை சுட்டுக் கொல்வதற்கு உளவுத்துறை முயன்றிருக்கிறது.

150000 டாலர்கள் கூலிப்படைக்கு  கொடுப்பதற்கு ஒப்பந்தம் போட்டிருந்தனர். அவர் ஐக்கிய நாடுகள் சபைக்கு நியூயார்க் வரும்போது தீர்த்துக் கட்டவும்  முடிவு செய்திருந்தனர்.

ஆனால் அந்த சிவப்பு சிந்தனையாளனுக்கு முடிவு கட்ட வல்லரசுகளால் முடியவில்லை.

1 கருத்து:

Nat Chander சொன்னது…

Fidel Castro will be remembered as a key figure of the twentyth century an iconoclast and a revolutionary
Fidel Castro was a great egalitarian and larger than life
But death is the greatest leveller for us all..

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...