ஞாயிறு, 6 நவம்பர், 2016

அத்தான் ...அந்த மூணு நாள் லீவு இன்னிக்கித்தான்...ஸ்டார்ட்டிங்...

என்னதான் இணக்கமாக போனாலும் 'அந்த ' நேரம் பார்த்து ஒரு பிகு பண்ணுவார்கள் பாருங்கள்   அப்பப்பா....கொன்னே போட்டுறலாம் போலிருக்கும்.

"மூடே இல்லிங்க" என்று மனசு நிறைய ஆசையை வச்சுக்கிட்டு திரும்பி படுத்துக் கொள்வார்கள்.பெண்களுக்கு இப்படி காக்கவைப்பது ஈசி! இந்த ஆண்களுக்குத்தான் பொறுமை என்பது கிடையவே கிடையாது.கோபத்தை  காட்டமாட்டான் அந்த நேரத்தில் மட்டும்! அவனால் எந்த அளவுக்கு எறங்கிப்  போகமுடியுமா ...தயார்தான்.!

மனைவியை 'தயார் ' படுத்துகிற முயற்சியை மத்தியானமே தொடங்கி விட வேண்டும்!

அது எப்படி?

என்னுடைய அனுபவ தொகுப்பு 'எஸ்.எம்.எஸ்.கள் இதோ.....!

** "டி....வேலையே ஓடல செல்லம். மவுஸை தொட்டாலே உன் ஞாபகம்தான்.சீக்கிரமே அத்தான் வந்திடுறேன்."

** ''இன்னிக்கி லஞ்ச் சூப்பர். பாக்சை ஓப்பன் பண்ணியதுமே கொடுத்துவச்சவன்டா பொண்டாட்டி மணக்க மணக்க கவனிக்கிறா என்று எல்லா பயல்கலுமே வயிறு எரியிரானுக! இன்னிக்கி ராத்திரி அர்த்தமுள்ள  ராத்திரியாக இருக்கும்ல?

** "டார்லிங்..ஆபீஸ் கிளம்புறபோது ஏன் டல்லா இருந்தே.எங்கம்மா திட்டுனாங்களா? டோன்ட் ஒர்ரி! அந்த கிழத்துக்கு அடிக்கடி நட்டு கலண்டுக்கும்! கை வலின்னு சொன்னியே..நைட் அமுக்கி விடறேன்"

** "ஜானு.! போனஸ்ல உனக்கு சர்ப்ரைஸா ஒன்னு வாங்கித்தாரேன்! சின்ன  விரலில் அழகு மோதிரம்.கிஸ் யூ"

** " நாளைக்கு சண்டே. என்ன பண்ணலாம்? நைட்  டிஸ்கசன் .ரெடியா இரு"

** "எனக்கு ஜுரம் அடிக்கிறமாதிரி இருக்கு! எந்த படத்துக்கு போகலாம்."

** "எனக்கு அத்தையை பார்க்கனும்னு ஒரே நினைப்பா இருக்கு.உங்கம்மாவிடம் பேசு. லீவில் போயிட்டுவரலாம்!"

**" ப்ரா கேட்டியே? என்ன சைஸ். இப்ப அளவு மாறி இருக்கும்ல?"

** "புதுசா ஒரு விளையாட்டு கண்டு பிடிச்சேன். நைட் டெமோ பண்ணிக் காட்றேன்"

ஆனால் இத்தனைக்கும் மசியாமல் ஒரு எஸ்.எம்.எஸ்.வரும்பாருங்க! புள் அடிச்சாலும் போதை வராதுங்க.

எஸ்..அந்த எஸ்.எம்.எஸ்.இடி இதுதான்!

" அத்தான். அந்த மூணு நாள் லீவு இன்னிக்கித்தான் ஆரம்பம். சாரி"

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...