சனி, 19 நவம்பர், 2016

சின்ன வெங்காயம் சிற்றின்பம் பெருக்குமா...இடைத்தேர்தல் முடிவுகள்?

இன்னும் இரண்டு நாளில் முடிவுகள் தெரிந்துவிடும்!இடைத்தேர்தலின் பலன்கள்!

ஆண்டியின் கோவணத்தை அவிழ்த்தால் அதிசயமா நடக்கும்?

இப்படித்தான் முடிவுகள் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்!

அதிகார மீறல், பணத்தட்டுப்பாடு நெருக்கடியில் தாராள பணப் புழக்கம்,காவல்துறையின் ஒத்துழைப்பு,அமைச்சர்களின் நேரடிப் பார்வை -இவ்வளவும் அதிமுகவுக்கு ஆதரவு!

இவைகளுக்கு தி.மு.க.வினால் பதிலடி கொடுக்க முடிந்ததா? தடுக்க முடிந்ததா? இடைத்தேர்தல்தானே...என்ன மாற்றமும் ஏற்படப்போவதில்லை  என்கிற மனப்பான்மையுடன்தான் வேலை செய்தார்கள்.

ஜெயித்தால் படுத்தபடியே ஜெயித்தோம் என்றே  மனசாட்சியை மண்மூடி  புதைத்து விட்டவர்கள் சொல்லப்போகிறார்கள்.

ஆளும் கட்சியும் அதிகாரவர்க்கமும் சேர்ந்து செய்த அடாத செயல்களால்  வெற்றி பெற்றார்கள் என எதிர்க்கட்சியினர்  சொல்வார்கள்.

ஆனால் இவைகளையும் மீறி  எதிர்பாராதவை நிகழ்ந்து விட்டால்?

நடக்குமா? வாய்ப்பு இருக்கிறது!

திருப்பரங்குன்றம் தவிர்த்து மற்ற இரு தொகுதியிலும்.....  ஒன்றிலாவது  வரலாம்.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி கட்சிக்காரர்களுக்கு இருந்த கவலை மக்களிடம் காணப்படவில்லை.

அவர்கள் அன்றாடம் பட்டுக்கொண்டிருக்கும் அவதிகளுக்கு வழி தேடுகிறவர்களாக மாறி இருக்கிறார்கள்.

உண்மையிலேயே வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்கிற மக்கள் விழித்தெழும்  வரை மத்தியதர மக்களும் படித்த வாக்காளர்களும் அளிக்கிற வாக்குகள்  பலன் இன்றியே போகும்.

வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கிறவர்கள் அனைத்துக்கட்சிகளின் விசுவாசிகளாக மாறிக்கிடப்பதால் ஜனநாயகம் போதையிலேயே கிடக்கிறது..

சின்ன வெங்காயம் சிற்றின்பத்தை பெருக்கும் என்பது பெருங் குடிகாரனுக்கு  பொருந்தாது,!

எனது கருத்தில் மாறுபடுகிறவர்கள் இருப்பார்கள் என நினைக்க வில்லை.!

ஆளும் அதிகாரவர்க்கத்துக்கும் திமுகவுக்கும் நடக்கிற பலப் பரீட்சையில்
அதிசயம் நிகழாது!

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...