சனி, 12 நவம்பர், 2016

வச்சுடாய்ங்கண்ணே ஆப்பு ...ஜல்லிக்கட்டுக்கு!

''அண்ணே. ஜல்லிக்கட்டுக்கு  வச்சுட்டாய்ங்கண்ணே ஆப்பு?"

மதுரை ,முகவை மாவட்டங்களில்  இருந்து  சிலர்   வருகிற  தமிழர் திருநாளான பொங்கல் விழாவுக்கு முன்னதாகவே இப்படி  குமுறினாலும் அது வியப்புக்குரியது இல்லை! 2014-ல்  ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட  தடை  வருகிற புத்தாண்டிலும் தொடரலாம் என்பதே இன்றைய மார்க்கெட் கலவரம்.!

பா.ஜ.க.அமைச்சர் மதிப்புமிகு பொன்னார் அவர்கள் என்னதான் வாக்குறுதி கொடுத்தாலும் உச்சநீதிமன்றம் செவி சாய்ப்பது மாதிரி தெரியவில்லை.

"பழந்தமிழரின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு"

"சரி! பதினாறாம் நூற்றாண்டில் அடிமைகளைப் போல மனிதர்கள் நடத்தப்பட்டார்கள். அது கரெக்ட் என்று சொல்வீர்களா?"

உச்ச நீதிமன்ற நீதிபதி பகிரங்கமாகவே ஓப்பன் கோர்ட்டில் இப்படி கேட்டிருக்கிறார்.

பாஜக என்ன சொல்கிறது?

"மராத்தான் ஓட்டங்கள் நடக்கிறதே...ஐஸ் கட்டியை கை,தலையினால் உடைக்கவில்லையா? அது மாதிரிதான் ஜல்லிக்கட்டும்!"

சாமர்த்தியமான பதில்தான் என  'பேஷ் பேஷ் ...பலே பாஜக" என முதுகை தட்டிக்கொடுத்தால் உச்சந்தலையில் ஓங்கி விழுகிறது சம்மட்டி!

"அது மனிதர்களின் தனிப்பட்ட விருப்பம். இஷ்டப்பட்டு கஷ்டங்களை  தாங்குகிறார்கள். ஆனால் காளைகள் விருப்பமுடனா ஜல்லிக்கட்டு  நடக்கிறது? சொல்லுங்கய்யா! அதை கட்டாயப்படுத்துவது  சரியா?"

இதுவும் உச்ச மன்ற நீதிபதியின் கேள்விதான்!

"மாண்பமை நீதிபதி அவர்களே! ஜல்லிக்கட்டு என்பது  விளையாட்டுதான்!" என்று மத்திய அரசு சொல்ல அதற்கு அந்த நீதிபதி வைத்தார் ஆப்பு.!

" அப்படியானால் வீடியோ கேம்ஸ் விளையாடுங்க! ஒரு பக்கம் பசுவை அன்புடன்  பாதுகாக்க சொல்கிறீர்கள். மறுபக்கம் மனிதர்களின் பொழுதுபோக்கு கருவியாக காளைகளை பயன்படுத்தப் பார்க்கிறீர்கள். சட்டப்படி அனுமதிக்கமுடியாது" என்கிறார்  நீதிபதி.

இவை அனைத்துமே உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரின் கருத்துதான்!

இதை மத்திய,மாநில அரசுகள் எவ்வாறு  எதிர்கொள்ளப் போகின்றன என்பதுதான்  நமது எதிர்பார்ப்பு.

தமிழர்களின் வீர விளையாட்டை காப்பாற்றவேண்டிய அதிமுக அரசு ஆழ்ந்த  உறக்கத்தில் !

யார் எழுப்புவது?


3 கருத்துகள்:

mani rathinam சொன்னது…

வேண்டும் ஜல்லிகட்டுதமிழரின் அடையாளம் அழிக்கபடுகிறது..,

mani rathinam சொன்னது…

வேண்டும் ஜல்லிகட்டுதமிழரின் அடையாளம் அழிக்கபடுகிறது..,

மணியன் சொன்னது…

ஒருமித்த கருத்து நம்மிடையே ஏற்படவேண்டும். மொத்த தமிழகமும் கிளர்ந்தெழ வேண்டும். நடக்குமா என தெரியவில்லையே மணிரத்னம் ஐயா.

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...