செவ்வாய், 8 நவம்பர், 2016

ஏய்...பாவிகளா..டில்லி தூசிக்கு அவ்வளவு பவரா?

500,1000  ரூபா நோட்டுகள் செல்லாது என்று மோடி சொல்லி அதுக்கு முப்பதாம்தேதி வரை கேடு  சாரி.... கெடு கொடுத்திருந்ததை கூட  ஜனங்க பொறுத்துக்குவாங்க.. ஆனா  டில்லி தூசியை சுவாசித்தால் பிள்ளை பிறக்காது என்று சொல்வதை எப்படிய்யா  பொறுத்துக்க முடியும்?

இந்தியாவில் பதினைந்து சதவிகிதம் ஆண்கள் ஆண்மை இல்லாதவர்கள் என்கிறது புள்ளி விவரம்.

தலைநகரில் இருக்கிற சத்ரிகா அகர்வால் என்கிற டாக்டர்தான் ஆண்மைக் குறைவு ஏற்படுகிற வாய்ப்பு அதிகம் என்கிறார்.

ஆண்களுக்கு மட்டும் அந்த மாசுப்படலம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை .பெண்களுக்கும் தாய்மைப் பேறு பாதிப்பு ஏற்படும் என்கிறார் அந்த டாக்டர்.

அட கொடுமையே!

ஆகவே நண்பர்களே ...மாசுப்படலம் தமிழ்நாட்டில் அரசியலில் அதிகம் என்றாலும் காற்றில் பரவி விடாமல் பாதுகாப்பது நமது கடமை.

 அது சரி..இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் எப்படி  ரூபாய் நோட்டு பிரச்னையை  தீர்ப்பார்கள். கள்ளப்பணம் வாங்கிய அதிகாரிகள் என்ன பண்ணப்போகிறார்கள்? மந்திரிமார்கள் பதுக்கிய பணத்தை எப்படி வெளிக்கொணர்வார்கள்? நம்ம நடிகர்கள்,நடிகைகளிடம் கணக்கில் வராத பணம் டன் கணக்கில் இருக்குமே!

எல்லாம் மோடி பார்த்துப்பார்!

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...