ஞாயிறு, 6 நவம்பர், 2016

சும்மா இருக்கிற கமலை எழுப்பிவிடாதிங்கப்பா!

ஊரு உலகம் சும்மா கெடந்தாலும் இந்த ஜோசியப் புலிகள் சும்மா இருக்கிறதில்ல. எவனையாவது,அல்லது எவளையாவது சொறியனும்.

கால் உடைஞ்சி இப்பத்தான் குணமாகிட்டு வாரார் கமல்ஹாசன்! எதோ தாலி கட்டிக்கிட்டவ பிரிஞ்சி போனமாதிரி இவனுகதான் புலம்பிக்கிட்டு புதுசா  ஆளை தேடிக்கிட்டு இருக்கானுக.

போனால் போகட்டும் போடான்னு கமல்ஹாசனே நிம்மதியா தூங்கிட்டு இருக்கிறபோது " சார் உங்களுக்கு இன்னும் ரெண்டு பாக்கி இருக்குன்னு  " தூண்டி விடுறானுங்க. ராகு ,செவ்வாய்னு கிரகம் கிரகமாக போயி பொண்ணு  பிடிக்கிறாங்க சார்!

அந்தாளுக்கு சுத்தமா இந்த சமாச்சாரம்லாம் பிடிக்கவே பிடிக்காது. உலகநாயகன்  சுத்தமான பெரியாரிஸ்ட். கடவுளே இல்லைன்னு சொல்லிக்கிட்டு  இருக்கிறவர்.

 முதல் மனைவியை டைவர்ஸ் பண்ணிய போது சுத்தமா அந்த வீட்டை தொடச்சி எடுத்திட்டு போனாங்க. அப்ப சரிகா  நெற மாசம்.  வயித்தில ஸ்ருதி இருந்துச்சி. பிரசவத்துக்கு ஓசி கார்ல  கூட்டிட்டு போனார். படிப்படியா சொந்த முயற்சியில் இப்ப  உலக நாயகனாக  உசந்து நிக்கிறார்.

அவருக்கு இப்ப ராகு பார்வை வரப்போகுதாம்.அதனால வெளிநாட்டுப் பொண்ணு  வந்து சேருமாம். அதுவும் நிக்காதாம். செவ்வாய் பண்ற வேலையாம். அதுக்குப் பிறகு அரசியலில் இருந்து சக்தி வாய்ந்த பொண்ணு  கிடைக்குமாம்.

இப்படி கெளப்பிவிட்டு கமல் பெயரை கெடுக்கப் பார்க்கிறாய்ங்கய்யா!

2 கருத்துகள்:

Nat Chander சொன்னது…

patthuppa ippallam ivaru rasigare ivarmele KADUPPA IRUKKANGALAM...

மணியன் சொன்னது…

செமை...அருமை.

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...