புதன், 9 நவம்பர், 2016

கமல் கதறி அழுதது எப்போது?

விபத்துகள் எதிர்பார்த்து வருவதில்லை. வீட்டுக்குள் அடங்கிக்கிடந்தாலும்  பாத்ரூம் செல்லுகிறபோது வழுக்கி விழுந்து முடக்கிப் போட்டுவிடும்.

அது வலிந்து  தேடிக்கொண்டதில்லை. கவனமின்மை ,மன அமைதியின்மை காரணமாக இருக்கலாம்.அதை  நாம் விதி எனவும் சொல்லிக்கொள்வோம்.

ஆனால் பிற மனிதர்களால் ஏற்படும் வலி இருக்கிறதே.....மனதை கீறி புண்ணாக்கிவிடும்.தழும்பேறி தடம் பதித்துவிடும். சதா உறுத்திக்கொண்டே  இருக்கும்.

மண நாளோ,பிறந்த நாளோ எதிர்வரும் நேரத்தில் திட்டமிட்டே  மனவலியை  உருவாக்குவது ஒரு சிலருக்கு மகிழ்ச்சியை தரலாம். அதற்காகவே காத்திருந்தது போல செயல்படுவார்கள்.

அது வன்புணர்வை விட கடுமையானது.

கால் முறிந்து உலகநாயகன் கமல்ஹாசன் தனது வலிகளை பற்றி பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

"எனது காலில் மல்டி பிராக்சர்ஸ். வலியில் உயிரே போய்விடும் போல் இருந்தது. மயக்கத்தில்தான் வைக்கப்பட்டிருந்தேன். இந்த வலியை சொல்லிவிடலாம். மற்ற வலிகளை நான் பொதுவில் வைப்பதில்லை. எனது  பிறந்த நாளுக்கு வாழ்த்துக் கூற வருகிற நண்பர்கள், ரசிகர்களுடன் மகிழ்ச்சியாகவே இருக்க விரும்புவேன்.

பிறந்த நாளன்று  நான் கண்ணீர் விட்டதில்லை. ஆனால் அதுவும் ஒரு பிறந்த நாளன்று நடந்துவிட்டது. எனது பதினாறாவது பிறந்தநாள் அன்று  எந்த திசையில்,எப்படி செல்வது என்று புரியாத நிலையில் அறையை பூட்டிக்கொண்டு  கதறி அழுதிருக்கிறேன்.அது ஒன்றுதான்  எனது பிறந்தநாள்  அன்று அழுதது.

பொதுவாக எனது வாழ்நாள் முழுவதும் சோதனைகள்தான்."

இதுதான்  கமல்ஹாசனின் வேதனை.
 

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...