சனி, 12 நவம்பர், 2016

செல்லாத நோட்டு அறிவிப்புக்கு அதிமுக ஆதரவா,எதிர்ப்பா?

விற்பனை இல்லாத கடையில் விலைவாசி பட்டியல் எழுதி வைத்தால் என்ன, எழுதாமல் விட்டால்தான் என்ன என தமிழக அரசு நினைத்து விட்டதோ என்னவோ?

முதல்வர் ஜெயலலிதா வகித்த பொறுப்புகளை எல்லாம் சுமந்துகொண்டு இருக்கிற ஓ.பி.எஸ். இன்னமும் மவுனசாமியார் மாதிரியே  இருந்து கொண்டு  இருக்கிறார்,

இந்தியாவையே உலுக்கி எடுத்துவிட்ட 500, 1000 ருபா நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பினால் தமிழகமே கிட்டத்தட்ட முடங்கி விட்டதாகவே சொல்லலாம். வேறு பல பதிவர்கள் இதை பற்றி விரிவாகவே அலசிவிட்டதால்  அதை மறுபடியும் கசக்க விரும்பவில்லை.

ஆனால் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

முதல்வர் ஜெயலலிதாவை கேட்டு அவரது  கருத்தினை அறிக்கையாக  தந்திருக்கலாமே! ஒருவேளை அந்த அறிக்கை எனது ஊனக்கண்களால் பார்க்க இயலாது போயிற்றோ என்னவோ? அப்படி வந்திருந்தால் எனது  தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனக்கு தெரிந்தது " புதிய ரூபா தாள்களில் எழுதினால் செல்லாது போய்விடும்"என்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது என்கிற 'வாட்ஸ் அப்' பகிர்தல்தான்!

வணிகம் இல்லாமல் கடைகள் அடை பட்டுள்ளன. அப்பாவி மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். பஸ் பயணம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கெல்லாம் தீர்வு சொல்லவேண்டிய கடமை மாநில அரசுக்கு இருக்கிறதா  இல்லையா?

இன்னும் எத்தனை காலம் இப்படியொரு அவலம்?

அரசுதான் உரியவர் இல்லாத கடையாக இருக்கிறது என்றால் ஆளும் அதிமுகவின் கருத்து என்ன?

அவர்களுக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்கிற  கவலை.

உருப்படுவோம் !

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இப்படி ஒரு அரசு இருந்தால் என்ன ? ...............

மணியன் சொன்னது…

பின்னூட்டத்துக்கு நன்றி.

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...