Saturday, December 10, 2016

நிழல் முதல்வர் நிஜ முதல்வர் ஆவாரா?

தமிழக அரசின் ஒட்டு மொத்த நிர்வாகம் ,காவல் துறை உள்பட  அரசுக்கு சற்றும்  தொடர்பில்லாத சசிகலாவுக்கு அடி பணிந்து நிற்கிறது.

காரணம் என்ன? இதை மத்திய அரசு அனுமதிப்பது ஏன் ?

அவர்தான் நிழல் முதல்வராக இருந்து வந்திருக்கிறார்.ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தாலும் சசிகலாஇல்லாமல் அவர் எந்த முடிவையும்  எடுத்ததில்லை.

இப்படித்தான் யூகிக்க முடிகிறது. ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபிறகு அவரது விரல் அசைவுக்குதான் மருத்துவமனையும்  அரசும் கட்டுப்பட்டிருந்தது. முறைப்படி அரசு அறிவிக்கவேண்டிய கடமை இருந்தும் அது நடக்கவில்லை என்றால் அதற்கு காரணம் சசிதான்!

மர்மங்கள் இனி அவிழப்போவதில்லை.அது முதல்வருடன் சந்தனப்பேழையில் உறங்கிக்கொண்டிருக்கிறது. அதன் உறக்கத்தை கலைக்கும் மந்திரம் மோடிக்கு மட்டுமே தெரியும்.

நேற்றுவரை உடன் பிறவா சகோதரியாக அறிவிக்கப்பட்டவர் இன்று நாளேடுகளின் விளம்பரங்களில் சின்னம்மா ஆக வாழ்த்தப்படுகிறார். பொதுக்குழுவுக்கு முன்பே அவரை பதவி ஏற்க பெரும்புள்ளிகள் வற்புறுத்துகிறார்கள் இதுவரை இரண்டாம்  கட்ட தலைவர்களை முதல்வராக இருந்த ஜெயலலிதா உருவாக்கவில்லையா? திறமை இல்லாதவர்களையா தனக்கு அடுத்த நிலையில் வைத்து ஆட்சியையும் கட்சியையும் நடத்தி இருக்கிறார்?

இப்படி மக்கள் நினைக்கலாம்! அவர்கள் 'தெய்வமகள்" சீரியல் பார்ப்பவர்களாக இருந்தால் ஓரளவுக்கு புரிந்தவர்களாக இருக்க முடியும்!

நிழல் நிஜமாகும் நாள் நெருங்கிவிட்டது. ஜெ.மறைந்ததும் அவரது சொந்த மாளிகைக்குள் நுழையும் 'உரிமை 'பற்றி எவரேனும் கேட்க முடிந்ததா? அதைப்போலத்தான் நாளை பொதுச்செயலாளர் ஆகப்போகும் சசியைப் பற்றி எவரும் கேள்வி கேட்கப்போவதில்லை.

மருத்துவமனைக்கு சென்ற அனைத்துக்கட்சி தலைவர்களும் மனசாட்சியை  அடகு வைத்துவிட்டு யாரோ சொன்னதை கேட்டு ஊடகங்களிடம் சொன்னதைப் போல நாளையும் இதை
வரவேற்பார்கள். நாளை கூட்டணி  சேரவேண்டிய அவசியம் இருக்கிறது.

செல்லாத நோட்டு அறிவிப்பினால் சாதாரண மக்கள் படுகிற அவதிகளை கண்டும் காணாமலும் பெயருக்கு அறிக்கை வாசிக்கிற எதிர்கட்சிகளுக்கு  பதவிதான் முக்கியம் என்றாகிப்போனபின்னர் நாடு எக்கேடு கெட்டால் இவர்களுக்கு என்ன?

நிஜ முதல்வராகப்போகும் சசிகலாவுக்கு முன்னதாகவே வாழ்த்துகள்.

1 comment:

Anonymous said...

இது திருக்கடையூரில், ஆச்சாரியர்கள் வாழ்த்த நடந்த அறுபதாம் கல்யாணத்தில் எடுத்த போட்டோ போலத் தெரிகிறதே?

விவசாயம் இல்லாத மந்திரக்கிணறு...!

கிணறு வெட்டினாலே அது விவசாயம் பண்ணுவதற்காக இருக்கும் அல்லது  குடிக்க மற்ற அன்றாட வீட்டு வேலைகளுக்காக இருக்கும். கிணறு என்றால் கட்டாயம் ...