ஞாயிறு, 18 டிசம்பர், 2016

கேரள மாணவர்களின் 'ராகிங்' கோரம்.

"சாப்பிட்டதும் உடனே தூங்கிடனுமா? வாங்கடா!"

கோட்டயம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆஸ்டலில் சேர்ந்த  ஜூனியர்களை தங்களது அறைக்கு வலுக்கட்டாயமாக கூட்டிக்கொண்டு போகிறார்கள் சீனியர்கள்.

"ம்ம்.....அந்த மூலையில போய் உக்காருங்க!"

உட்காருகிறார்கள்.

'' இப்ப எந்திரிச்சு  ஒத்த கால்ல நில்லுங்க!"

நிற்கிறார்கள்.

"ரைட். இப்ப நூறு புஷ்-அப்,  நூறு சிட்-அப்  எடுங்க!"

சிலர் களைத்துப் போகிறார்கள்.சிலர் மயங்குகிறார்கள்.

"பத்து நிமிஷம் ரெஸ்ட் எடுத்திட்டு மறுபடியும் ஆரம்பிங்கடா!"

அதில் அவினாஷ், சியூஜி  இருவரும் மோசமாக பாதிக்கப்பட்டாலும் சீனியர்கள் கவலைப்படவில்லை.!

"ஓகே! இப்ப சீனியர்கள் கெட்ட வார்த்தையில பாடுவாங்க. அத மறக்காம நீங்க  பாடனும். புரியிதா?"

தலையாட்டுகிறார்கள்.ஆனால் அவர்களால் முழுமையாக பாட முடியவில்லை. விடிகாலை மூன்று மணிக்கு பாடி முடித்ததும் அப்படியே  அள்ளிக்கொண்டு பாத் ரூமுக்கு போகிறார்கள். குளிக்கச்சொல்கிறார்கள்.

"சரி..இப்ப தண்ணி அடிக்கணும். அதுவும் ராவா! மிக்ஸ் பண்ணக்கூடாது."

வாந்தி எடுத்தவர்களுக்கு  சரமாரியாக அடி உதை!

ஆகஸ்ட் மாதம் கோட்டயம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த இந்த ராக்கிங்கில் முன்னாள் மாணவர் ஒருவரும் சம்பந்தப்பட்டிருக்கிறார்.

அவினாஷ் ,சியூஜி இருவரில் அவினாஷ் கிட்னி பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் டயாளிஸ் சிகிச்சையில்! மற்றொருவர் தீவிர சிகிச்சையில்!

மாறுபட்ட அரசியல் சார்ந்த மாணவர்களை தண்டிக்க இப்படிப்பட்ட ராக்கிங் நடப்பதாக சொல்கிறார்கள். தொடர்புடைய மாணவர்களை போலீஸ் தேடுகிறது.

ராக்கிங்கே தப்பு. இதில் அரசியல் வேறயா? விளங்கும்.

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...