திங்கள், 19 டிசம்பர், 2016

ஓ.பி.எஸ்.சின் முதல்வர் பதவி காலியாகிறதா?

அப்பல்லோவில் முதல்வராக ஜெயலலிதா சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டதுமே பின்னணியில் ஒரு வலையும் அதன் தொடர்பாகவே  பின்னப்பட்டிருக்கிறது என்பது தற்போதுதான் உணரப்படுகிறது.

ஜெயலலிதாவினால் இரண்டு தடவை முதல்வராக பொறுப்பில் நியமிக்கப்பட்டவர்தான் தற்போதைய முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்.
அதிமுகவினரால் அம்மா என அழைக்கப்படுகிற ஜெயலலிதாவே ஒ.பி.எஸ்.சை நம்பியிருக்கிறபோது அம்மாவின் மறைவுக்குப் பிறகு  சசிகலாவை  அந்த பதவியில் அமர்த்தவேண்டிய  அவசியம் என்ன?
ஒ.பி.எஸ்.சின் மீது நம்பிக்கை இல்லாமல் போவதற்கு  என்ன காரணம்,? ஓட்டுப் போட்ட சாமான்யனின் கேள்விதான் இது!

பதவியில் இருந்து கொண்டிருக்கிறவர்களைத் தவிர மக்களின் ஆதரவு யாருக்கு என்பது தெரியவில்லை. கட்சியில் பலரின் எதிர்ப்பு சின்னம்மா என்கிற சுவரொட்டியை கிழிக்கிற அளவுக்கு இருக்கிறது என்பதை சென்னையில் பல இடங்களில் பார்க்க முடிகிறது.

முதல்வராக ஓபிஎஸ் இருந்தாலும் சின்னம்மாவின் கட்டளைக்குத்தான் அரசு அதிகாரிகள் கட்டுப்படுகிறார்கள்.இது உலகம் அறிந்த உண்மை.இந்த அளவுக்கு பதவியில் இல்லாமலேயே அதிகாரத்தை கையில் வைத்திருப்பதின் ரகசியம் என்ன? இதனால்தான் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா எத்தகைய நிலையில் அனுமதிக்கப்பட்டார், வீடு திரும்புவார் என தினமும் ஒரு அரசியல்வாதி அறிக்கை வாசித்தபின்னர்  திடீரென ஒருநாள் கார்டியாக் அரெஸ்ட் என மாறியது ஏன் என்பது போன்ற பல விஷயங்கள் முழுமையாக தெரியாமல் மர்மமாக இருக்கிறதா?

மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவருமா என்பது தெரியவில்லை.ஆனால்  ஓபிஎஸ் பதவி பறிக்கப்படலாம் என்பதற்கு பின்புலமாக இருப்பவர் நடராஜன் என்பதாக ஒரு பேச்சு இருக்கிறது. இவர்தான் மத்திய மாநில அரசு எந்திரங்களை முழுமையாக கையாளத் தெரிந்தவர் என்பது அறிந்திருக்கிற உண்மை!

மத்திய அரசு ஓபிஎஸ்.சை கைவிடாது .ஆளுநர் துணை நிற்பார், உள்துறை அமைச்சகமும் சில நெருக்கடிகளை கொடுக்கும் என சிலர் நம்புகிறார்கள்.

பார்க்கலாம் யாருடைய நம்பிக்கை பலிக்கும் என்பதை!

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...