வியாழன், 22 டிசம்பர், 2016

''என் கண் முன் நில்லாதே..போ"

"கம்பனை  மட்டுமே  படிக்க வேண்டுமா...அவன்  எதைத் தழுவினானோ , அதையும்  சற்று  படி...முழுமையும்  படிக்கத்தேவை இல்லை. இலக்குவனை நோக்கி சீதை கடிந்து சொன்னதை மட்டும் படித்துப்பார். தமிழ்ப்பண்பாடு  மீது   கம்பனுக்கு இருந்த காதல்  உனக்குப்  புரியும்"

சொன்னவர்  வேறு  யாரும் இல்லை. எனது  மதிப்பிற்குரிய  சகோதரர்  சிவகுமார் தான்!

அவருக்கு கம்பனின் மீது எத்தகைய காதல் இருந்தது என்பது எனக்குத் தெரியும். அவரது  இராமாயண படைப்புக்கு  'கம்பன் என் காதலன்" என  தலைப்பு   சூட்டியது  நான்தான்.! முப்பத்தைந்து வருட காலம்  நாங்கள்  நண்பர்கள். நல்ல நண்பர்கள். இன்று வரை  கசப்பு இன்றி  தொடர்கிறது. இனியும்  தொடரும்.

அவர் சொன்னதின் பேரில்  வால்மீகியை  தொட்டேன். இலக்குவனை சீதை  கடிந்து சொன்னது  எந்த படலத்தில் என்பது  தெரியும். 

மாரீசன் வதை படலத்தின்  தமிழாக்கம்  தேடிப்பிடித்து  வாசித்தேன்.

தன்னைக் காத்து  நிற்கும்  இலக்குவனைப் பார்த்து  ஜானகி  இப்படி  சொல்கிறாள்.;

"இராமன்  அழிகையில் அவனை காக்க  கருதாமல் கவலையற்று  என்னைக் காத்து  நிற்றல் யாது பயன்  கருதியது?

என்  தலைவனுக்கு ஆபத்து நேர்ந்தவிடத்து என்னை பெண்டாள கருதியே நீ  உன் மனைவியை அயோத்தியில் விட்டு விட்டு தனியே தொடர்ந்து வந்தாய். நான் உன்னை ஒரு பொருளாக மதியேன். இனி என்  நில்லாதே போ !"

எத்தகைய  சீற்றம்  அவளது  பேச்சில்!

ஆனால்  கம்பன்  இதைப்பற்றி  கண்டு கொள்ளவே  இல்லை. இராமன்,இலக்குவன், சீதை  மூவரையும்  உயர்வாகவே  பார்த்தான். களங்கம்  விளைவிக்க  அவனது  தமிழ்ப்பண்பாடு  இடம் தரவில்லை.

லட்சுமண் ரேகா  என்று  சொல்லப்படுகிற  லட்சுமணன்  கோடும் கம்ப காவியத்தில் இல்லை. 

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...